Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கேஜ்ரிவாலின் செயலாளர், ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 6, 2024
in Default
1
கேஜ்ரிவாலின் செயலாளர், ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை..
5
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடெல்லி: டெல்லி முதல்வரின் தனிச் செயலாளர், ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள் சிலரின் வீடுகளில் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) சோதனை நடத்தினர். டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளின் 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

டெல்லி முதல்வரின் தனிச்செயலாளர் பிபவ் குமார் மற்றும் டெல்லி ஜல் போர்டு (டிஜேபி) முன்னாள் உறுப்பினர் ஷலப் குமார் ஆகியோரின் வீடுகள், மேலும் சில ஆம் ஆத்மி கட்சியினர் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.

டெல்லி ஜல் போர்டில் வழங்கப்பட்ட டெண்டர் முறைகேடு தொடர்பாக இந்த பணமோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிபவ் குமார் மற்றும் ஷலப் குமார் வீடுகள் தவிர ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.டி. குப்தாவின் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்துகின்றனர். தற்போது கைவிடப்பட்டுள்ள டெல்லி புதிய மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை அனுப்பிய 5வது சம்மனையும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நிராகரித்து சில தினங்களுக்கு பின்னர் அமலாக்கத் துறையினர் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பணமோசடி வழக்கு: டெல்லி ஜல் போர்டில் வழங்கப்பட்ட டெண்டர் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் டெல்லி அரசின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏபிசி) ஆகியவை தொடர்ந்த இரண்டு வழக்குகளின் அடிப்படையில், டெல்லி ஜல் போர்டு டெண்டர் செயல்பாடுகளில் பணமோசடி முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிறுவனம் ஒன்றுக்கு மின்காந்த மீட்டர் வழங்குதல், பொறுத்துதல், சோதனை செய்தல் போன்றவைத் தொடர்பாக டெல்லி ஜல் போர்டு அதிகாரிகள் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக சிபிஐ, டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு வழக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப தகுதிகளை பூர்த்தி செய்யாமல், போலி ஆவணங்கள் மூலமாக ஏலம் பெற்று ரூ.38 கோடிக்கு சட்ட விரோத ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்ப தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல், என்கேஜி இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் நிறுவனத்துக்கு டெல்லி ஜல் போர்டு தலைமை பொறியாளர் ஜெகதீஸ் குமார் அரோரா ரூ.38 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை வழங்கியதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக ஜெகதீஸ் குமார் அரோரா மற்றும் ஜெடிபி ஒப்பந்ததாரர் அனில் குமார் அகர்வாலை ஜன.31-ம் தேதி பணமோசடி தடுப்புச் சட்டம் 2022ன் கீழ் ஜன.31-ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

“வருமான வரி, அமலாக்கத் துறை வந்தால் கவலை இல்லை; வரவேற்கிறோம்” – அமைச்சர் ரகுபதி…

Next Post

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் மாபெரும் பேரணி..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் மாபெரும் பேரணி..

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் மாபெரும் பேரணி..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    அரவிந்த் கெஜ்ரிவால் முன் ஜாமின் வாங்காவிட்டால் கைதும் உறுதி ஜெயிலும் உறுதி

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In