பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முடியும் வரை அமைதியாக இருங்கள் என கௌதம் கம்பீருக்கு இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கியுள்ளார்.
ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை (நவம்பர் 22) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக வரலாற்று டெஸ்ட் தொடர் தோல்வியை சந்தித்த இந்திய அணி தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்திய அணிக்கு மட்டுமின்றி, இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட கௌதம் கம்பீருக்கும் இந்த தொடர் மிக முக்கிய தொடராக மாறியுள்ளது.
