Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Kasthuri: "கஸ்தூரி என்ன தீவிரவாதியா?" – தமிழிசை சௌந்தரராஜன் சொல்வதென்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2024
in அரசியல் செய்திகள்
0
Kasthuri: "கஸ்தூரி என்ன தீவிரவாதியா?" – தமிழிசை சௌந்தரராஜன் சொல்வதென்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கஸ்தூரியை ஒரு தீவிரவாதி போன்று காவல்துறையினர் நடத்துவது சரியானது அல்ல எனப் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்ட கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்களைத் தவறாகப் பேசியது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. பலரும் கஸ்தூரிக்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டிருந்தார். அவர்மீது சென்னை, மதுரை போன்ற இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், கஸ்தூரி தலைமறைவானார். இதனையடுத்து, நேற்று (நவம்பர் 17) அவர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.

நடிகை கஸ்தூரி

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது தமிழிசை சௌந்தரராஜனிடம் கஸ்தூரி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், “நடிகை கஸ்தூரி தவறான கருத்துக்களைத் தெரிவித்ததற்கு மன்னிப்பு கேட்டார். ஆனாலும் ஒரு தீவிரவாதி போன்று அவரைக் காவல்துறையினர் நடத்துவது சரியானது அல்ல.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை செய்யப்பட்டுப் பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், கொலையாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. வேங்கைவயலில் மக்கள் குடிக்கும் தண்ணீரில் மனிதக் கழிவைக் கலந்தவர்களை இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. கொடும் குற்றங்களைச் செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், கஸ்தூரியைத் தீவிரவாதி போலக் கைது செய்துள்ளது. காவல்துறை பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள்.

தமிழிசை சௌந்தரராஜன்

கருத்து பகிரும்போதுகூட சிலரின் கருத்துகளுக்குத் தீவிரமாக நடவடிக்கை எடுக்கிறார்கள். சிலரின் கருத்துக்களைக் கண்டுகொள்வதே இல்லை. மருத்துவர் காந்தராஜ் நடிகைகள் குறித்து தவறாகப் பேசியதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் மீது நடவடிக்கை இல்லை. ஆதலால் இவர்கள் பாரபட்சமாகத்தான் நடந்துகொள்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

எந்த நம்பிக்கையில் இந்தியா பயிற்சி ஆட்டங்களில் விளையாடவில்லை; முன்னாள் கேப்டன் அதிர்ச்சி!

Next Post

உ.பி.: மருத்துவமனை தீ விபத்து – மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உ.பி.: மருத்துவமனை தீ விபத்து – மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு!

உ.பி.: மருத்துவமனை தீ விபத்து - மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In