Last Updated:
Kashi Tamil Sangamam | சித்த மருத்துவம், தமிழ் இலக்கியம், கலாச்சார ஒற்றுமைக்கு அகத்தியர் ஆற்றிய பங்களிப்பை எடுத்துரைப்பது இந்த ஆண்டு காசி தமிழ்ச் சங்கமத்திற்கான கருப்பொருளாக அமைந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மகா கும்பமேளாவுக்கு மத்தியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கோலாகமாகத் தொடங்கியது. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், உத்தரப்பிரதேசத்தின் வாரணாசிக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் வகையில். காசி தமிழ்ச் சங்கமம் நடத்தப்படுகிறது. இதன் மூன்றாவது ஆண்டு நிகழ்ச்சியை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்து வரவேற்றார். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் பங்கேற்று உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி மங்களகரமாகத் தொடங்கியது. தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தன.
முன்னதாக காசி தமிழ்ச் சங்கமம் புகைப்பட கண்காட்சியை எல்.முருகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதில் அகத்தியர், திருவள்ளுவர், அவ்வையார், ஆண்டாள், வள்ளலார், ஜி.டி.நாயுடு, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் உள்ளிட்டோரின் பங்களிப்பு தொடர்பான குறிப்பு அடங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், வாரணாசி போன்று தமிழ்நாட்டிலும், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எல்.முருகன் தெரித்தார்.
Also Read: சென்னை தொழிற்சாலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு – மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
சித்த மருத்துவம், தமிழ் இலக்கியம், கலாச்சார ஒற்றுமைக்கு அகத்தியர் ஆற்றிய பங்களிப்பை எடுத்துரைப்பது இந்த ஆண்டு காசி தமிழ்ச் சங்கமத்திற்கான கருப்பொருளாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து காசி தமிழ்ச் சங்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவோர், பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்பமேளாவில் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ள காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் செல்லவுள்ளனர்.
February 16, 2025 7:42 AM IST
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி.. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்த நடவடிக்கை – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

