51 வயதான ஜோசப் விஜய் சந்திரசேகர் பேசிக்கொண்டிருக்கும்போது ஆம்புலன்ஸ்கள் செல்ல சிரமப்படுவதைக் கண்ட நடிகர், தனது உரையை நிறுத்தி, ரசிகர்களுக்கு வழிவிடுமாறு கேட்டுக்கொண்டது வீடியோவில் பதிவாகியிருக்கிறது.
10,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி கேட்ட நிலையில், சுமார் 27,000 பேர் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
குறிப்பிட்ட நேரத்துக்கு நடிகர் வராததால், மக்கள் நீண்ட நேரம் தண்ணீர், உணவு இல்லாமல் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
Al Jazeera English:
தென் மாநிலமான தமிழ்நாட்டில் பிரபல இந்திய நடிகரும் அரசியல்வாதியுமான ஒருவரின் பேரணியில் சனிக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாக மதிப்பிடப்படும் பேரணியில், விஜய் உற்சாகமான கூட்டத்தினரிடம் உரையாற்றும்போது, அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் குழு அவரது பேருந்தை நெருங்க முயற்சிக்கும்போது விழுந்து நெரிசல் ஏற்பட்டதாக செய்தி வெளியிட்டன.
2024-ம் ஆண்டில், நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று, அரசியல் கட்சியை நிறுவினார் விஜய். இந்தியாவில் அதிக மக்கள் கூடும்போது கூட்ட நெரிசல் ஏற்படுவது மிகவும் பொதுவானது.
ஜனவரியில், மகா கும்பமேளாவின் போது பல்லாயிரக்கணக்கான இந்து பக்தர்கள் புனித கங்கையில் குளிக்க விரைந்ததால் குறைந்தது 30 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
