தமிழக அரசு நடத்தும் விசாரணை
மேலும், “இந்த இடத்தை காவல்துறையினர் எவ்வளவு போர்ஸ் பண்ணி தவெகவிடம் கொடுத்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் கொடுப்போம்.
எங்களுக்கு ஏன் தமிழக அரசின் மீதும் தமிழக அரசு நடத்தும் விசாரணை மீதும் நம்பிக்கை இல்லை என்றால், தவெகவினர் ஓடிவிட்டார்கள் என சொல்கிறார்கள்.
எங்களது மொபைல் சிக்னலை ட்ராக் செய்யலாம், கரூர் எல்லையில் நான், பொதுச் செயலாளர் நிர்மல் குமார், அருண்ராஜ் அவர்கள் எல்லோரும் காத்திருந்தோம்.
காவல்துறை நீங்கள் வந்தால் கலவரம் வரும் நிறைய பிரச்னை வரும் என வலியுறுத்தினார்கள். அதையும் நாங்கள் தாக்கல் செய்வோம்.
தமிழக வெற்றிக் கழகம் அங்கே வரக்கூடாது என்பதற்காக ஒட்டுமொத்த கட்சியினரையும் தடியடி நடத்தி தீவிரவாதிகள் மாதிரி அடித்து அனுப்பினார்கள் என்பதை நாங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்வோம்.
`இந்த சந்தர்பத்தை பயன்படுத்தினார்கள்”
நாங்களும் மனிதர்கள்தான். 25 வருஷம் 60 வருஷம் இருக்கும் அரசியல்வாதிகள் கிடையாது. இந்த இழப்புக்குப் பிறகு முதல் 3,4 நாட்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாது. எங்கள் உறவுகள் இழந்துவிட்டு நாங்கள் மீடியாவில் வந்து பேசிக்கொண்டிருக்க மாட்டோம்.
இந்த சந்தர்பத்தை திமுக பயன்படுத்தியது. அன்று முழுவதும் என்ன நாடகம் ஆடினார்கள் என்பது மக்களுக்கு தெரியும். அடுத்த நாள்களில் நீதிமன்ற விடுமுறை என்பதால் அதோடு நாங்கள் சட்ட ரீதியாக போராட முடியாது, இதுவொரு திட்டமிட்ட சதி.

`தமதமாகத்தான் இதை உணர்ந்தோம்’
உண்மையைக் கூறிய யூடியூபர்கள் கைது செய்யப்பட்டனர். சமூக வலைதளங்களில் பேசியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஏனென்றால் உண்மையின் ஒருபக்கம் மட்டுமே தெரிய வேண்டும். அவர்கள் மட்டுமே பேச வேண்டும் என நினைத்தார்கள்.
அரசு செய்தி தொடர்புத் துறை ஒரு வாரத்துக்கு தவெக மீது எப்படி பொய் குற்றச்சாட்டுகளை சொல்லலாம் என்பதை மட்டும் தான் பார்த்தது. இந்த பிரச்னையை வைத்து திமுக அரசு ஒட்டுமொத்த கட்சியை முடக்க திட்டமிட்டு இருக்கிறது என்பதை தமதமாகத்தான் உணர்ந்தோம்.
