Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கர்நாடகம்: தலைமை மாற்றமா? ஆட்சி மாற்றமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 2, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கர்நாடகம்: தலைமை மாற்றமா? ஆட்சி மாற்றமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்தகால மரபுப்படி கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் தனக்கே முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று டி.கே.சிவகுமார் வாதிட்டுவந்தார். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினரின் ஆதரவைத் திரட்டுவதற்கு காரணமாக இருந்ததால், தனக்குத்தான் முதல்வர் பதவியைத் தரவேண்டும் என்று சித்தராமையா அடம்பிடித்தார்.

பெரும்பாலான சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவும், வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கும் உள்ள முன்னாள் முதல்வர் சித்தராமையாவை ஓரங்கட்டினால், வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்று காங்கிரஸ் தலைமை உணர்ந்தது. தலைமைக்கு நெருக்கமானவர் என்பதால் டி.கே.சிவகுமாரை அமைதிப்படுத்தும் முயற்சியில் இறங்கியது.

காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மேற்கொண்ட சமரச பேச்சுவார்த்தையில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வராக ஆட்சி நடத்த முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து எவ்வித அதிகாரபூர்வமாக அறிவிப்பையும் கட்சி மேலிடம் அறிவிக்கவில்லை. மாறாக, கர்நாடகத்தில் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் பதவியேற்பார்கள் என்று மட்டும் காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதன்படி, 2023, மே 20 ஆம் தேதி இருவரும் பதவியேற்றுக்கொண்டனர்.

முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் ஏதாவது செய்துகொள்ளப்பட்டதா என்று கேட்டதற்கு, “மக்களோடு அதிகாரப் பகிர்வு செய்துகொண்டுள்ளோம்’ என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் அப்போது பதிலளித்திருந்தார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் பதவியேற்று மே 20-ஆம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட சாதனை விழாவில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் ஒற்றுமையாக ஆட்சியை நடத்த வேண்டும்’ என்று அறிவுரை கூறியிருந்தார். ஆனால், கடந்த 2 ஆண்டுகாலத்தில் “முதல்வர்’ பதவி குறித்து காங்கிரஸ் அமைச்சர்களிடையே அடிக்கடி கருத்துமோதல்கள் நடந்தவண்ணம்தான் இருந்து வந்தது.

5 ஆண்டுகளுக்கு சித்தராமையாவே முதல்வராக நீடிப்பார் என்று அவரது ஆதரவாளர்களும், வெகுவிரைவில் டி.கே. சிவகுமார் முதல்வராக பதவியேற்பார் என்று அவரது ஆதரவாளர்களும் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒக்கலிகர் சமுதாய மாநாட்டில் பேசியிருந்த டி.கே. சிவகுமார், ஒக்கலிகர்களின் ஆதரவு இருந்தால், முதல்வர் ஆவேன் என்று பேசியிருந்தார்.

முதல்வர் கனவு: “முதல்வர்’ பதவி மீது கண் வைத்துள்ள டி.கே.சிவகுமார், அதற்கேற்ப சில அரசியல் நகர்வுகளில் ஈடுபடாமல் இல்லை. முதல்வர் பதவியை அடையும் நோக்கம் தனக்கிருப்பதாக அவ்வப்போது பகிரங்கமாகக் கூறிவந்துள்ள டி.கே.சிவகுமார், 2028-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் வரை “முதல்வர்’ கனவை அடமானம் வைக்கத் தயாராக இல்லை என்பதையே அவரது நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

நீர்வளத் துறையின் அதிகாரிகளை தனக்குத் தெரியாமல் பணியிடமாற்றம் செய்தது தொடர்பாக வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்த துணை முதல்வர் டி.கே. சிவகுமார், தன்னுடைய துறையில் தனது கவனத்துக்கு கொண்டுவராமல் யாரையும் பணியிடமாற்றம் செய்யக் கூடாது என்று தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜ்னிஷுக்கு தெரிவித்திருந்தார்.

மேலிடத் தலைவர்களின் ரகசிய சமரச ஒப்பந்தத்தின்படி, 2025, நவம்பர் 20-ஆம் தேதி முதல்வர் பதவியை தனக்கு சித்தராமையா விட்டுத்தருவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையில், அண்மையில் பெங்களூரு வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால், அமைப்பு பொதுச் செயலரும், கர்நாடக மேலிடப் பொறுப்பாளருமான ரண்தீப்சிங் சுர்ஜேவாலாவை சந்தித்துள்ள டி.கே. சிவகுமார், முதல்வர் பதவியை தனக்கு விட்டுத்தர வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், மாற்றுநில முறைகேடு தொடர்பாக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சம்பந்தம் இருக்கும் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதில், சித்தராமையா குற்றவாளி ஆக்கப்பட்டால், அது காங்கிரஸ் அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்திவிடும். எனவே, முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை மாற்றும்படி டி.கே.சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.

சாதனை ஆசை: 2013 முதல் 2018-ஆம் ஆண்டுவரை 5 ஆண்டுகாலம் முதல்வர் பதவியை வகித்த சித்தராமையா, இனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று அறிவித்திருந்தார். இந்த நிலைப்பாட்டை காற்றில் வீசிவிட்ட சித்தராமையா, 2023-இல் தேர்தலில் போட்டியிட்டு, அடம்பிடித்து மீண்டும் முதல்வராகிவிட்டார். கர்நாடகத்தின் பெரும்பான்மை சமூகங்களான லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள் பாஜகவுக்கு ஆதரவளித்து வருவதால், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினரின் ஆதரவை சித்தராமையா பெற்றுத்தருவதாக காங்கிரஸ் தலைமை நம்புகிறது. அதை சாதகமாக்கி, “முதல்வர்’ பதவியை விட்டுத்தராமல் பிடிவாதம் பிடிக்கிறார் சித்தராமையா.

தனது அரசியல் எதிரியாகக் கருதப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் சமூகத் தலைவர்களுடன் சமரசம் ஏற்படுத்திக்கொள்ள முனைந்துள்ளார் சித்தராமையா. அப்படித்தான், காங்கிரஸ் செயற்குழுவின் நிரந்தர அழைப்பாளரான பி.கே. ஹரிபிரசாதை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்தார் அவர். முதல்வர் பதவியில் இருந்து விலகினால், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரின் வாக்குகள் காங்கிரஸýக்கு கிடைக்காது என்று காங்கிரஸ் கட்சியை நம்பவைத்து காய்களை தனக்கு சாதகமாக நகர்த்திவருகிறார்.



.

Previous Post

`திமுக பின்னால் ஒளிந்து ராஜ்சபா பதவி.. நம்பிய வாக்காளர்களுக்கு துரோகம்’ – கமல் மீது வானதி விமர்சனம் | Bjp Vanathi Srinivasan critisized Kamal haasan

Next Post

Vikatan Plus – 08 June 2025 – அட்டைப்படம் விகடன் ப்ளஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Vikatan Plus – 08 June 2025 – அட்டைப்படம் விகடன் ப்ளஸ்

Vikatan Plus - 08 June 2025 - அட்டைப்படம் விகடன் ப்ளஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In