Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கர்நாடகா முதல்வராகிறார் டி.கே. சிவக்குமார்? அமைச்சரின் பேச்சால் பரபரப்பு.. மல்லிகார்ஜுன கார்கே மகன் கொடுத்த பதில்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 3, 2025
in அரசியல் செய்திகள்
0
கர்நாடகா முதல்வராகிறார் டி.கே. சிவக்குமார்? அமைச்சரின் பேச்சால் பரபரப்பு.. மல்லிகார்ஜுன கார்கே மகன் கொடுத்த பதில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்நிலையில், மாநில முதல்வரான சித்தராமையா மீது மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) ஊழல் புகார் எழுந்தது. இது தொடர்பாக லோக் ஆயுக்தா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. அதேபோல், இது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறையும் எடுத்துள்ளது.

சித்தராமையா மீது ஊழல் புகார் எழுந்ததும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அந்தப் பதவியை துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு வழங்க வேண்டும் என பேச்சுகள் எழுந்தன. அதுமட்டுமின்றி, டி.கே. சிவக்குமார், தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைக்க பெரிதும் துணையாக இருந்ததால் அவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்றும் பேச்சுகள் எழுந்தன.

இதையும் படியுங்கள் : குஜராத்தின் கிர் தேசிய பூங்காவில் சபாரி சென்ற பிரதமர் மோடி..! சிங்கங்களை புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி

ஆனால், சமீபத்தில் மூடா வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை எனக் கூறி லோக் ஆயுக்தா அவரை வழக்கில் இருந்து விடுவித்தது. இதனைத் தொடர்ந்து முதல்வர் மாற்றம் குறித்த பேச்சுகளும் சற்று ஓய்ந்திருந்தது.

இந்நிலையில், கர்நாடகா காங்கிரஸின் மூத்த தலைவரான வீரப்ப மொய்லி, மீண்டும் டி.கே. சிவக்குமாருக்கு முதல்வர் பதவி என பரபரப்பை கிளப்பியுள்ளார்.

வீரப்ப மொய்லி கூறியதாவது, “டி.கே. சிவக்குமார் நல்ல தலைமையை வழங்கியுள்ளார். கட்சியைக் கட்டமைத்துள்ளார். அவர் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது. அது காலத்தின் கட்டாயம். முதல்வர் பதவி என்பது பரிசாக வழங்கப்படுவது அல்ல” எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “நான் இதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. நான் தொழிலாளர் கூட்டத்தில் இருந்தேன்” எனத் தெரிவித்தார்.

இதேபோல், இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும், கர்நாடகாவின் அமைச்சருமான பிரியங்க் கார்கே, “டி.கே.சிவகுமார் இன்றோ நாளையோ முதல்வராகப் போகிறார் என்று மொய்லியோ, வேறு யாரோ சொல்லவில்லை. அவருடைய உழைப்புக்கு ஒரு நாள் வெகுமதி கிடைக்கும் என்று சொன்னார்கள். அதை உயர்மட்டக் குழு முடிவு செய்யும். ஊடகங்கள் முன் சொன்னால் நடக்குமா? எங்களின் பொறுப்புகள் மிகத் தெளிவாக உள்ளன, சித்தராமையா முதல்வர், டி.கே.சிவகுமார் துணை முதல்வர். யாராவது ஒரு நாள் முதல்வர் ஆக வேண்டும் என்று நான் விரும்பலாம், அவர்கள் கடினமாக உழைத்தால், அவர்களுக்கு நாளை வெகுமதி கிடைக்கும். அவர் என்ன சொன்னாலும் அது அவருடைய கருத்து” எனத் தெரிவித்தார்.

First Published :

March 03, 2025 3:13 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

கர்நாடகா முதல்வராகிறார் டி.கே. சிவக்குமார்? அமைச்சரின் பேச்சால் பரபரப்பு.. மல்லிகார்ஜுன கார்கே மகன் கொடுத்த பதில்



.

Previous Post

மார்ச் 8 முதல் பயன்பாட்டுக்கு வரும் பிங்க் ஆட்டோ!

Next Post

விரைவில் முடிகிறது ஜனனி அசோக்குமாரின் தொடர்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விரைவில் முடிகிறது ஜனனி அசோக்குமாரின் தொடர்!

விரைவில் முடிகிறது ஜனனி அசோக்குமாரின் தொடர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In