Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“தொகுதி மறுவரையறை குறித்தான அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு நம்பகத்தன்மையற்றது”… கர்நாடக முதலமைச்சர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 1, 2025
in அரசியல் செய்திகள்
1
“தொகுதி மறுவரையறை குறித்தான அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு நம்பகத்தன்மையற்றது”… கர்நாடக முதலமைச்சர்!
3
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
News18News18

தொகுதி மறுவரையறை குறித்து மத்திய உள்துறை அமைச்சரின் பேச்சு நம்பகத்தன்மையற்றது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் பேசியிருந்தார். இது தொடர்பாக கோவையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “தென்மாநிலங்களுக்கு மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது” என்றார்.

இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “மக்களவைத் தொகுதி மறுவரையறை குறித்து தவறான தகவல்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளதாக” குற்றம்சாட்டினார்.  “தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென்மாநிலங்களுக்கு அநீதி ஏற்படாது என்று அமித்ஷா கூறியிருப்பது திசை திருப்பும் செயல்” என்றார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களை மட்டும் தட்டும் வகையில் அமித்ஷா பேசியிருக்கக் கூடும் என்றும் கூறினார்.மக்களவைத் தொகுதிகளில் தென்மாநிலங்களுக்கு இருக்கும் பங்கை குறைக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 2021 மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட்டால் தென்மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் குறையும் என்றும் கூறியுள்ளார்.

.

Previous Post

“சிறுமியும் தவறு செய்துள்ளார்” – ஆட்சியரின் சர்ச்சை பேச்சு : எதிர்கட்சிகள் கண்டனம்..

Next Post

நான் கோப்பில் கையெழுத்திடாலும் வேலை நடப்பது இல்லை! – ஆளுநர் முன் புதுச்சேரி முதல்வர் வேதனை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நான் கோப்பில் கையெழுத்திடாலும் வேலை நடப்பது இல்லை! – ஆளுநர் முன் புதுச்சேரி முதல்வர் வேதனை!

நான் கோப்பில் கையெழுத்திடாலும் வேலை நடப்பது இல்லை! - ஆளுநர் முன் புதுச்சேரி முதல்வர் வேதனை!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ❤️❤️❤️❤️❤️❤️❤️💚💚💚💚💚❤️❤️❤️❤️❤️❤️

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In