வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
ஹைதராபாத்: காங்கிரஸ் மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்துகிறது. காங்கிரசார் நாடகம் ஆடுகிறார்கள் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறினார்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியதாவது: நீங்கள் (மக்கள்) கவனமாகக் கேட்க வேண்டும். அனைத்து எம்.பி., தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், டில்லியில் நம் பலத்தை காட்ட முடியும். காங்கிரஸ் மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்துகிறது. காங்கிரசார் நாடகம் ஆடுகிறார்கள்.
தெலுங்கானா மாநிலம் மதச்சார்பற்றதாகவே இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். யாராலும் பிரிக்க முடியாது. இணைந்து செயல்படுவோம். முஸ்லிம்கள் ஹிந்துக்களுக்காகவும், ஹிந்துக்கள் முஸ்லிம்களுக்காகவும் வேலை செய்வார்கள். இரண்டு சகோதரர்களைப் போல நமது மாநிலத்தை முன்னெடுத்துச் செல்வோம். இவ்வாறு சந்திரசேகர ராவ் பேசினார்.
2014ல் ஆந்திராவிலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டதில் இருந்து, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க சந்திரசேகர ராவ் போராடி வருகிறார். அதேநேரத்தில் ஆளும் பாரத் ராஷ்டீரிய சமிதியை ஆட்சியில் இருந்து அகற்ற நினைக்கும் காங்கிரஸ் மற்றும் பாஜ., எதிராக களமிறங்குகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

