Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`ஆட்சி, அமைச்சரவையில் பங்கு வேண்டும்'-செல்வப்பெருந்தகையிடம் வலியுறுத்திய காங்., சட்டசபை குழு தலைவர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 7, 2025
in அரசியல் செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் அமைப்பை காப்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடந்தது. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங் தலைமை வகித்தார். எம்.பி.க்கள் விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், தாரகை கத்பர்ட், ரூபி மனோகரன், தமிழக கிராம காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட பலர் பேசினர். இதில் விஜய்வசந்த் எம்.பி பேசுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் 3 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்தமுறை குறைந்தது 4 தொகுதிகளையாவது காங்கிரஸுக்கு பெற்றுத்தரவேண்டும்” என்றார்.

மேடையில் பேசிய சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார்

இதில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார், “1967-க்குப் பின் 58 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை. நாம் கிராமங்கள்தோறும் கமிட்டி அமைத்து வலுவாக உள்ளோம். காங்கிரஸ் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்குமோ அந்த கட்சி ஆட்சிக்கு வரும். காங்கிரஸ் வெற்றிபெறும் தொகுதிகள் அதிகமாக உள்ளன. தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் என வெற்றிப்பெறக்கூடிய தொகுதிகள் அதிகமாக உள்ளன. எனவே தேர்தல் நேரத்தில் கூட்டணி பேசும்போது அதிக தொகுதிகளை பெறுவதற்கு அகில இந்திய தலைமையை வலியுறுத்த வேண்டும். காமராஜர் ஆட்சிக்கட்டிலில் இருந்து வெளியே வந்த சமயத்தில் கிட்டத்தட்ட 46 விழுக்காடு வாக்குகள் காங்கிரஸுக்கு இருந்தது.  இப்போது சற்று தொய்வடைந்திருந்தாலும், காங்கிரஸ் கட்சி எந்தபக்கம் போகிறதோ அந்த பக்கம்தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்பதை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். எனவே ஆட்சியில் பங்கு வேண்டும், அமைச்சரவையில் இடம் வேண்டும். உழைப்பவர்களுக்கு வாய்ப்புகொடுங்கள்

 நம் இயக்கத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டும்” என்றார்.

கூட்டத்தில் பேசிய விஜய்வசந்த் எம்.பி

இந்த கூட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசுகையில், “1967-ம் ஆண்டு காங்கிரஸ் இதோடு முடிந்தது என்று காமராஜரை ஓரம்கட்ட நினைத்தபோது காமராஜரை வரவேற்று புத்துணர்வுபெற வைத்தது குமரி மாவட்டம்.  அங்கீகாரத்துக்காக தான் அனைத்து அமைப்புகளும் உழைத்துக் கொண்டிருக்கின்றன. அங்கீகாரம் இல்லாமல் இருந்தால் அது ஒருதலைபட்சமானதாகும். எனவே கிராம கமிட்டி என்ற ஆயுதத்தை எடுத்து வேர்களை நோக்கி போகிறோம். இதை கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தோம். 7 மாதங்கள் ஆகிவிட்டன. 72 சதவிகிதத்துக்கும் மேல் கிராம கமிட்டியை நிறைவு செய்துள்ளோம். இன்னும் 28 சதவிகித கிராம கமிட்டி அமைக்க வேண்டி உள்ளது. அதை 2 மாதங்களில் அமைத்து விடுவோம். அதன்பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கமிட்டி இல்லாத கிராமமே இருக்காது.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

இனி அந்த நகராட்சியில் காங்கிரஸார் யார் இருக்கிறார்கள்? அந்த பேரூராட்சியில் யார் இருக்கிறார்கள் என்ற கிண்டல் பேச்சு இருக்காது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கமிட்டி எல்லா கிராமங்களிலும் இருக்கிறது. விஸ்வரூபம் எடுக்கும் காங்கிரஸ் 2026 தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய சக்தியாக இருக்கும். பா.ஜ.க ஒரு நாடு, ஒரு தேர்தல், ஒரு மொழி, ஒரு இருக்கை என்ற முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் பாசிச சக்திகள் காலூன்ற அனுமதிக்கக் கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக தொகுதி வேண்டும் என்பது போன்றவற்றை கேட்டுள்ளீர்கள். அதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தான் முடிவு செய்யும். தமிழகத்தில் என்ன நடக்கிறது, என்ன தேவை என்பதை அகில இந்திய கமிட்டிக்கு எடுத்துச் சொல்வோம். அதை வைத்து தலைமை முடிவெடுப்பார்கள். எது தேவையோ அதை செய்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.



.

Previous Post

20 நாட்களுக்கு பிறகு கேரளா வந்த பிரிட்டிஷ் குழு.. எஃப் 35 விமானத்தை ஆய்வு செய்யும் பணி தொடக்கம்!

Next Post

“மராத்தியை மதிக்கிறோம்; அதன் பெயரில் வன்முறை ஏற்றுக்கொள்ளப்படாது” – மகாராஷ்டிரா முதல்வர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post

“மராத்தியை மதிக்கிறோம்; அதன் பெயரில் வன்முறை ஏற்றுக்கொள்ளப்படாது” – மகாராஷ்டிரா முதல்வர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In