மதுரையில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் சுந்தரராஜன். இவர் 1922 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்த இவருக்கு வயது தற்போது 102.
தென்னக ரயில்வேயில் 40 வருடம் பணிபுரிந்து, ஓய்வு பெற்று கடந்த 43 வருடங்களாக ஓய்வூதியம் பெற்று வருகிறார். இவருக்கு சீனிவாசன் என்ற மகனும், நரேந்திரன் என்ற பேரனும், வித்யத்ஸ்ரீமன் என்ற கொள்ளு பேரனும் உள்ளனர்.

100 வயதைக் கடந்த சுந்தரராஜனுக்கு இந்து முறைப்படி கனகாபிஷேகம், அவரது கொள்ளு பேரன் வித்யத்ஸ்ரீமன் செய்யும் நிகழ்ச்சி மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் நடைபெற்றது.
விழாவில் சுந்தரராஜன் மகன் சீனிவாசன் பாக்கியலக்ஷிமி தம்பதியினர், பேரன் நரேந்திரன் ஸ்ரீநிதி தம்பதியினர் கொள்ளுபேரன் வித்யத்ஸ்ரீமன் உட்பட அவரது உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
102 வயதிலும் கண்ணாடி உதவியின்றி தினந்தோறும் நாளிதழ் படிக்கும் இவர், யாருடைய உதவியுமின்றி நடக்கிறார். தன்னுடைய உணவுப்பழக்கங்களே தனது ஆரோக்கியத்திற்கான ரகசியம் என பெருமையோடு கூறுகிறார் 102 வயது சுந்தரராஜன்.


102 வயது முதியவருக்கு கனகாபிஷேகம் என்று போட்டிருப்பது அந்த வார்த்தைகள் வருத்தமாக உள்ளது நிறைய பத்திரிகைகள் 60 வயது முதியவர் மரணம் 65 வயது முதியவர் மரணம் என்று செய்திகளை வெளியிடுகின்றன அது என்ன முதியவர் ஒரு டிஜிபி 61 வயதில் அறுவது வயது முடிந்து ஓய்வு பெறுகிறார் முதியவர் ஓய்வு பெறுகிறார் என்று சொல்ல முடியுமா இப்பொழுது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வயது 70 க்கு மேல் ஆகிவிட்டது எனவே முதியவர் பதவி ஏற்கிறார் என்று சொல்ல இவர்களால் இயலுமா எனவே 102 வயது நபருக்கு கனகாபிஷேகம் என்று சொல்லலாமே இதையே நடைமுறைப்படுத்த வேண்டுகிறேன்