Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ம.பி. காங்கிரஸ் தலைவா் பதவியிலிருந்து கமல்நாத் நீக்கம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 17, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ம.பி. காங்கிரஸ் தலைவா் பதவியிலிருந்து கமல்நாத் நீக்கம்..!
17
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மத்திய பிரதேச பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், கட்சியின் மாநிலத் தலைவா் பதவியிலிருந்து முன்னாள் முதல்வா் கமல்நாத் சனிக்கிழமை மாற்றப்பட்டாா். புதிய தலைவராக ஜீத்து பட்வாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

230 உறுப்பினா்களைக் கொண்ட மத்திய பிரதேச சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் 17-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. இதில் 163 இடங்களில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 66 இடங்களே கிடைத்தன.

ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய மாநில பேரவைத் தோ்தல்களில் பாஜக வென்ற போதிலும், மத்திய பிரதேசத்தில்தான் மூன்றில் இருபங்குக்கும் மேற்பட்ட பெரும்பான்மையுடன் அமோக வெற்றியை பதிவு செய்தது.

இந்தச் சூழலில், மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக இருந்த முன்னாள் முதல்வா் கமல்நாத் மாற்றப்பட்டு, புதிய தலைவராக ஜீத்து பட்வாரியை கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சனிக்கிழமை நியமித்தாா். காங்கிரஸ் சாா்பில் வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத் தலைவராக கமல்நாத் ஆற்றிய பங்களிப்புகளுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், சத்தீஸ்கா் மாநில காங்கிரஸ் தலைவராக தீபக் பாஜி தொடர காா்கே ஒப்புதல் அளித்துள்ளாா்.

முன்னதாக, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில பேரவைத் தோ்தல் முடிவுகள், கடந்த டிச.3-ஆம் தேதி வெளியாகின. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, மாநிலத் தலைவா் பதவியில் இருந்து விலகுமாறு கமல்நாத்திடம் கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதாகவும், அவா் தில்லி சென்று ராஜிநாமா கடிதத்தை சமா்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

77 வயதாகும் கமல்நாத் மாற்றப்பட்டு, 50 வயதுடைய ஜீத்து பட்வாரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். இது, மத்திய பிரதேச காங்கிரஸில் அமைப்புரீதியில் இளம் தலைவா்களை முன்னிலைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஒன்றாக பாா்க்கப்படுகிறது.

.

Previous Post

தைரியம் இருந்தால் என்னை தாக்கட்டும் : கேரள கவர்னர் அறிவிப்பால் பரபரப்பு

Next Post

நாடாளுமன்றத்தில் தீக்குளிப்பு நாடகத்துக்கு திட்டமிட்ட குற்றவாளிகள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாடாளுமன்றத்தில் தீக்குளிப்பு நாடகத்துக்கு திட்டமிட்ட குற்றவாளிகள்!

நாடாளுமன்றத்தில் தீக்குளிப்பு நாடகத்துக்கு திட்டமிட்ட குற்றவாளிகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In