தமிழ்நாட்டு மண்ணின் மைந்தன்
மகா கவிஞர்களை, புரட்சியாளர்களை, சமூக சீர்திருத்தவாதிகளை, சிந்தையாளர்களை எல்லாவற்றிருக்கும் மேலாக அறம், கண்ணியம், சுயமாரியாதை மிக்கவர்களை உருவாக்கிய தமிழ்நாட்டு மண்ணின் மைந்தர்களில் நானும் ஒருவன். என்னை வளர்த்தெடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், எனக்காக குரல் கொடுத்து, ஆதரவு தந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
காந்தி, அம்பேத்கர், பெரியார்
சுதந்திரம் வாழ வேண்டும் என்று எனக்குள் சுதந்திர எண்ணைத்தை ஊட்டி வளர்த்த சுதந்திரப் போராட்ட வீரரான என் தந்தைக்கு இந்த மகிழ்ச்சியான தருணத்தை அர்ப்பணிக்கிறேன் . அவருடைய ரத்தம் மட்டுமல்ல, அவரது உயரிய எண்ணங்களும், கொள்கைகளும் காந்திஜியின் கனவுகளும், அம்பேத்கரின் பேரறிவும், பெரியாரின் உறுதியும் என் நரம்புகளில் ரத்தித்தில் நிறைந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
பார்லிமென்ட்டில் வெறுமனே விமர்சனங்களை மட்டும் முன்வைக்க நான் வரவில்லை. நாட்டின் வளர்ச்சியில் என் பங்களிப்பைக் கொடுக்கவும் வந்திருக்கிறேன்.
இதுதான் என் கொள்கை
இந்தியா பன்முகத்தன்மைக் கொண்டது. இங்கு எல்லாவிதமான கொள்கை கோட்பாடுகள் இருக்கின்றன. இந்தியாவில் ஓரணியின் பேரணி இருக்கக் கூடாது. ஒற்றுமையின் பேரணி தான் இருக்க வேண்டும்.
