குறிப்பிட்ட 12 மாநிலங்களில் மட்டுமே இந்த சிறப்புத் தீவிரத் திருத்தத்தை செயல்படுத்த முயற்சிப்பதன் உள்நோக்கம் என்ன?
இதனால் இந்த தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை வரலாற்றில் இல்லாத அளவிற்குக் குறைந்துவிட்டது. கர்நாடகா, மகாராஷ்டிராவில் வாக்குத் திருட்டு தொடர்பாக எழுந்த நியமான சந்தேகங்கள் இதுவரை தீர்க்கப்படவில்லை. வாக்குச் சாவடிகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை வெளியிடுவதில் ஏன் தயக்கம்?

சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்ய அலுவலர்கள் ஒரு வீட்டிற்குச் சென்று, வீட்டில் யாரும் இல்லை என்பதையெல்லாம் காரணம் காட்டி, அவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது அபத்தமானது. இதுபோன்ற அபத்தமான காரணங்களைக் காட்டி தகுதியுடைய வாக்காளர்களை நீக்கிவிடக்கூடாது.
இந்த S.I.R -ல் இருக்கும் பல குறைகளைத் தீர்க்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் மீது எழும் அவநம்பிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது. நடுநிலைமையோடு செயல்படுகிறோம் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் இருக்கிறது.
அவசர கோலத்தில் இந்த ‘S.I.R’யை செயல்படுத்தாமல், குறைகளை சரி செய்து நிதானமாக 2026 சட்டமன்ற தேர்தல் முடிந்தபிறகு செயல்படுத்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் வேண்டுகோள்” என்று பேசியிருக்கிறார்.
