Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

‘கல்கி 2989 ஏடி’ திரைப்படம் ஒரு வாரத்தில் படைத்த சாதனைகள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 5, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
‘கல்கி 2989 ஏடி’ திரைப்படம் ஒரு வாரத்தில் படைத்த சாதனைகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. இப்படம் கடந்த ஜூன் 27-ல் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

குபேரா: ராஷ்மிகாவின் சிறப்பு விடியோ!

உலகளவில் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ரூ.700 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் (ஒரு வாரத்தில்) இதுவரை கல்கி 2898 ஏடி திரைப்படம் படைத்த சாதனைகளைப் பார்ப்போம்..

1. 2024இன் அதிகமாக வசூலித்த ஹிந்தி திரைப்படம்: ஹிந்தியில் மட்டும் ரூ.162.8 கோடி முதல் வாரத்தில் வசூலித்துள்ளது. இதற்கு முன்பு பைட்டர் 146.5 கோடி வசூலித்திருந்ததே அதிகபட்சம்.

2. இந்தியா, உலகளவில் அதிகம வசூலித்த படம்: இந்தாண்டு வெளியான இந்திய படங்களில் கல்கி திரைப்படம்தான் 700 கோடியை தாண்டியுள்ளது. அதுவும் 6 நாளில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

3. திரைக்கு வந்த அதிகமான பார்வையாளர்கள்: கல்கி படத்துக்காக 2 கோடி பேர் இதுவரை திரையரங்குக்கு வந்துள்ளார்கள். இதற்கு முன்பு ஹனுமன் 1.44 கோடியும் பைட்டர் 1.17 கோடியும் பெற்றிருந்தன.

30 ஆண்டுகளுக்கு முன்பும் தற்போதும்..! மோகன்லாலுடன் எடுத்த புகைப்படம் வைரல்!

4. பிரபாஸின் 2ஆவது அதிகபட்ச வசூல்: பாகுபலி 1 (ரூ.650 கோடி), சலார் 1(ரூ.615 கோடி) படங்களுக்குப் பிறகு (ஒரு வாரத்தில்) அதிகமாக வசூலித்துள்ளது.

5. இந்தியளவில் அதிகம் வசூலித்த பட்டியலில் 8ஆவது இடம்: முதல் ஒரு வாரத்திலேயே டாப் 10 பட்டியலுக்குள் இடம் பிடித்துள்ளது. பாகுபலி 2, கேஜிஎஃப் 2, ஆர் ஆர் ஆர், ஜவான், அனிமல், பதான், தங்கல் ஆகிய படங்கள் இந்த வரிசையில் உள்ளன.

6. உலக அளவில் 4ஆவது அதிகம் வசூலித்த தென்னிந்திய படம்: கல்கி தெலுங்கில் உருவாக்கப்பட்ட படம். இது தென்னிந்திய படங்களில் அதிகம் வசூலித்த பட்டியலில் 4ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அடுத்த வாரத்தில் இன்னும் பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறது கல்கி.



.

Previous Post

சென்னையிலிருந்து கொல்லி மலைக்கு கம்மி பட்ஜெட் சுற்றுலா – வெறும் ரூ.4,000 இருந்தால் போதும்! | Chennai to kolli hills 2 days budget trip plan – here is how to do it

Next Post

DMK Vs ADMK: மேலும் ஒரு கள்ளச்சாராய மரணமா ஈபிஎஸ் போட்ட ட்வீட்! விளாசும் அமைச்சர் ரகுபதி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
DMK Vs ADMK: மேலும் ஒரு கள்ளச்சாராய மரணமா ஈபிஎஸ் போட்ட ட்வீட்! விளாசும் அமைச்சர் ரகுபதி!

DMK Vs ADMK: மேலும் ஒரு கள்ளச்சாராய மரணமா ஈபிஎஸ் போட்ட ட்வீட்! விளாசும் அமைச்சர் ரகுபதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In