பெண்கள் வெறுப்பு, குறிப்பிட்ட சமூகம் அல்லது பாலினத்துக்கு எதிராக கருத்துகள் கூறுவதை கடுமையாக எச்சரித்தது நீதிமன்றம்.
நீதித்துறையின் கண்ணியத்தை பேண தங்களது அவதானிப்புகளுக்கு இணக்கமாக செயல்படவேண்டியது அவசியம் என்றது நீதிபதிகள் அமர்வு.
சமூக வலைத்தளங்கள் வளர்ந்துள்ளதாலும் நீதிமன்ற நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவதாலும் நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தும்போது சாதாரண உரையாடல் கூட சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்குரைஞர்கள் உணர்ந்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
பெங்களூரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை “பாகிஸ்தான் போல இருக்கிறதே” என நீதிபதி வி ஶ்ரீஷனந்தா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதால் இந்த சூ மோட்டோ வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சில நாள்களுக்கு முன்பு பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், “விதவையாக இருந்ததால் மேக்கப் போட வேண்டிய அவசியம் இல்லை” எனக் கைம்பெண்களை அவமதிக்கும் வகையில் கூறியிருந்த கருத்தைக் கண்டித்தது உச்சநீதிமன்றம்.
இந்த வழக்கின் மூலம் நீதித்துறையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
