Last Updated:
பிகார் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் தலா 101 இடங்களில் போட்டி என ஜெ.பி. நட்டா தலைமையில் தொகுதி பங்கீடு முடிவாகியுள்ளது.
பிகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பிகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன. இம்முறையும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இந்த கூட்டணி தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்த தேர்தலிலும் கூட்டணி அதேபடியே நீடிக்கிறது.
243 இடங்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே, பாஜக தலைவர் ஜெபி நட்டா தலைமையில் நடந்த தொகுதிப் பங்கீடு கூட்டத்தில் சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி பாஜகவுக்கு 101 இடங்களும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 101 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் அதன் கூட்டணிக் கட்சிகளான சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக்ஜன சக்தி கட்சிக்கு 29 இடங்களும், ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 6 இடங்களும், உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சிக்கு 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
October 12, 2025 7:53 PM IST
101 தொகுதிகளில் பாஜக போட்டி! பிகாரில் என்.டி.ஏ. கூட்டணி தொகுதி பங்கீட்டை முடித்துவைத்த ஜெ.பி. நட்டா

