இந்தியாவுக்கான ஜெர்மனி நாட்டு தூதுவர் Dr.பிலிப்ப் அகேர்மன், இவர் டெல்லியில் உள்ள ஜெர்மனி தூதரகத்தில் பணியாற்றிவரும் நிலையில் நேற்று பாஜக தலைவர் JP. நட்டா அவர்களை சந்தித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள Twitter செய்தியில் ” பாஜக தலைவர் JP. நட்டா அவர்களுடனான சந்திப்பு நன்றாக அமைந்தது. நாங்கள் வரப்போகும் தேர்தல் குறித்த கட்சியின் செயல் திட்டம்/தந்திரம் ( Strategy ) குறித்து ஆலோசித்துக்கொண்டோம். ”
என்று அவர் நேற்று இரவு 7.52 மணிக்கு பதிவிட்டிருந்தார்.
இந்த சந்திப்பு தற்போது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறிவருகிறது.
“பெகாசஸ்” போன்ற சில தொழில்நுட்பங்கள் இங்கு கைமாறுகிறதா? நீங்கள் இதை தனிப்பட்ட அளவில் செய்கிறீர்களா அல்லது உங்கள் அரசாங்கமும் சம்பந்தப்பட்டதா ?? நமது நாட்டின் உள் தேர்தல் செயல்பாட்டில் அந்நியர்களின் கைவரிசையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இங்கே நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும், உண்மையாக பாஜக சம்பதம்பட்ட தேர்தல் விஷயங்களில் ஜெர்மன் தூதருடன் என்ன வேலை என்று சமூக வலைதளங்களில் நேட்டீசங்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.



