மேலும், சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது அறிக்கையில், “சென்னை மே தின பூங்காவில் தூய்மைப் பணியாளர்கள் ஒன்று கூடி உள்ளனர். இது தொடர்பாக செய்தி சேகரிக்க பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் அங்கு சென்றுள்ளனர்.
அங்கு வந்த காவல்துறையினர் தூய்மைப் பணியாளர்களை காவல்துறை வாகனங்களில் ஏற்றியுள்ளனர்.
இந்த நிகழ்வை படம் பிடிக்கச் சென்ற ஒளிப்பதிவாளர்கள், புகைப்பட கலைஞர்களை பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் பணி செய்ய விடாமல் தடுப்பதுடன் அவர்களைத் தள்ளிவிட்டு தாக்குவதற்கு முற்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து அங்கு பணியில் இருந்த இணை ஆணையர் விஜயகுமாரிடம் பத்திரிகையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், விஜயகுமார் பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாக பேசியதுடன் தொடர்ந்து செய்து சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பத்திரிகையாளர்களைக் கைது செய்வேன் என்று மிரட்டி உள்ளார்.
பொது இடத்தில் நடைபெறும் ஒரு நிகழ்வை படம் பிடிப்பதும், ஒளிப்பதிவு செய்வதும், செய்தி சேகரிப்பதும் பத்திரிகையாளர்களின் உரிமை. இதைத் தடுப்பது அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும்.
ஆகவே, பத்திரிகையாளர்களிடம் காவல்துறையினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வகுப்பெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது அதிர்ச்சிகரமாக உள்ளது.
பத்திரிகையாளர்களிடம் அராஜகமாக நடந்து கொண்ட காவல்துறையினரை சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இனி இதுபோன்ற நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபடக்கூடாது என்பதை காவல்துறை தலைமை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்திருக்கிறது.
