Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் – சென்னை வந்தார் பினராயி விஜயன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 21, 2025
in அரசியல் செய்திகள்
0
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் – சென்னை வந்தார் பினராயி விஜயன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 21, 2025 6:49 AM IST

அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.

பினராயி விஜயன்பினராயி விஜயன்
பினராயி விஜயன்

தொகுதி மறுவரையறை தொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சென்னையில் நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க தலைவர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

2026ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொகுதி மறுசீரமைப்பின் பணிகள் விரைவில் மத்திய அரசால் துவங்கப்படும் எனக்கூறி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். இந்த தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என குறிப்பிட்டு, 22.03.2025-ஆம் தேதி (நாளை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

இந்த கூட்டத்தில் கேரள, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதலமைச்சர்களும், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரும் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல் பல்வேறு மாநிலங்களில் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்றிரவு சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து நேற்றிரவு கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன் தங்கினார்.

First Published :

March 21, 2025 6:49 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் – சென்னை வந்தார் பினராயி விஜயன்



.

Previous Post

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மாா்ச் 23-இல் கோவை வருகை

Next Post

Puducherry Weather 21 March 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 26.98°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Puducherry Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 20.58°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Puducherry Weather 21 March 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 26.98°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In