அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட், இந்தியாவில் புதிதாக 20,000 பணியிடங்களைச் சேர்க்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிக்குமார் கூறியதாவது, “கடந்த இரு ஆண்டுகளில் சேவைத் திட்டங்கள் அதிகரித்ததால், வலுவான தொழிலாளர் கட்டமைப்பை உருவாக்கவுள்ளோம். பல புதிய பட்டதாரிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிதாகப் பணியமர்த்துதல், செயல் நுண்ணறிவு மூலம் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவதில்தான், நிறுவனம் கவனம் செலுத்துகிறது.
14,000 முன்னாள் ஊழியர்கள் மீண்டும் நிறுவனத்தில் இணைந்துள்ளனர்.
