அரசியலில் மட்டுமின்றி தற்காப்பு கலையிலும் அதிரடி காட்ட தெரியும் என்று தனது வேறு முகத்தை காட்டியுள்ளார் ராகுல்காந்தி.
தேசிய விளையாட்டு தினத்தை வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் போது தான் மேற்கொண்ட ஜியு-ஜிட்சு விழிப்புணர்வு முயற்சியை விவரித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் பயணத்தின் போது, தினமும் மாலை தனது முகாமில் ஜியு-ஜிட்சு பயிற்சியை மேற்கொண்டதாக கூறியள்ள ராகுல்காந்தி, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் கற்று தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
#JUSTIN
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களுடன் தற்காப்புக் கலையில் ஈடுபட்ட வீடியோ#RahulGandhi #News18tamilnadu | https://t.co/7dpn9FCtgj pic.twitter.com/svldIwFp2y— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 29, 2024
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தற்காப்பு பயிற்சிகளில் ஒன்றான ஜியு-ஜிட்சு, தியானம், அய்கிடோ உள்ளிட்டவை அடங்கியதாகவும், வன்முறையற்ற பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
பின்குறிப்பாக பாரத் டோஜோ யாத்ரா விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
.
