கர்நாடகாவில் உள்ள ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட, ஹோலேநரசிபுரா, ஹாசனில் அமைந்துள்ள அரசு நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில், பிரதமரின் சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் (PMSSS) பயின்று வரும் ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள், ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கின்றனர். அதில், “தாடியை ஷேவ் அல்லது ட்ரிம் செய்ய வேண்டும். இல்லையென்றால், கிளினிக்கல் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடவிடாமல் “ஆப்சென்ட்’ என குறித்துவிடுவோம் என தாடி குறித்து கட்டுப்பாடுகள் விதித்து, கல்லூரி சார்பில் மிரட்டுகிறார்கள்.
