Wednesday, September 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜெய் ஸ்ரீ ராம் விவகாரம்: இதெல்லாம் உதயநிதி சொல்ல கூடாது.. அண்ணாமலை ஆவேசம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 15, 2023 - Updated on October 16, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஜெய் ஸ்ரீ ராம் விவகாரம்: இதெல்லாம் உதயநிதி சொல்ல கூடாது.. அண்ணாமலை ஆவேசம்
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றால் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

நேற்றைய போட்டியும் அப்படிதான் பரபரப்பாக நடைபெற்றது. இதில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றிபெற்றது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வீரர் ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய போது இந்திய ரசிகர்கள் சிலர் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பெரும் வைரலானது.

இந்நிலையில் இந்த வீடியோவை தனது டிவீட்டர் பக்கத்தில் ஷேர் செய்த தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்தியா விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. இருப்பினும், அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான ரசிகர்களின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது.

விளையாட்டு என்பதை நாடுளை ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும், உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். வெறுப்பைப் பரப்பும் கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது” என்று கூறியிருந்தார். உதயநிதி ஸ்டாலின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ” ஒரு வீரர் செல்லும்போது ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்புவது அவர்களை கேவலப்படுத்துவதற்கு அல்ல. விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்று சொல்ல உதயநிதி ஸ்டாலினுக்கு அருகதை இல்லை.

தர்மத்தை தர்மமாகதானே பார்க்க வேண்டும். உதயநிதி ஏன் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறினார் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் அண்ணாமலை சாடினார். காங்கிரஸ் தங்களின் கட்சியை வளர்ப்பதை விட திமுகவை வளர்ப்பதில்தான் கவனமாக உள்ளது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

மகளிருக்கு பாதுகாப்பு இல்லாமல் விளம்பரத்திற்காக மகளிர் உரிமை மாநாடு நாடகம் நடத்தப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டினார். சட்டசபையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும் போது மைக் ஆஃப் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, சபாநாயகர் சுயபரிசோதனை செய்து அனைவ்ருக்கும் வய்ப்பளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Previous Post

திருப்பத்தூரில் பிரபல ஸ்கேன் மைய புரோக்கர் கைது

Next Post

சுங்கத்துறை பணிக்கான போட்டித் தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது: விசாரணை கோரும் ராமதாஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சுங்கத்துறை பணிக்கான போட்டித் தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது: விசாரணை கோரும் ராமதாஸ்

சுங்கத்துறை பணிக்கான போட்டித் தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது: விசாரணை கோரும் ராமதாஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In