Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்தியர்களுக்கு ஜாக்பாட்.. இனி வெறும் 3 வருடத்தில் ஜெர்மனியில் குடியுரிமை வாங்க முடியும்..!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 20, 2024
in Default
0
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.. இனி வெறும் 3 வருடத்தில் ஜெர்மனியில் குடியுரிமை வாங்க முடியும்..!!
14
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜெர்மனி நாட்டில் நீண்ட காலமாகக் குடியுரிமை விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் தளர்வு அளிக்க வேண்டும் என்ற பேச்சு அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், நிறுவனங்கள், அரசியல் வட்டாரங்கள் மத்தியில் இருந்து வருகிறது.

ரஷ்யா – உக்ரைன் போருக்கு முன்பு கூட மொழி தொடர்பான கட்டுப்பாடுகளிலும், விதிமுறைகளிலும் தளர்வு அளிக்கப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஜெர்மனி நாடாளுமன்றத்தில் புதிய குடியுரிமை சட்ட தளர்வுகளுக்கு 382-க்கு 234 வாக்குகள் பெற்று நடைமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தியர்களுக்கு ஜாக்பாட்.. இனி வெறும் 3 வருடத்தில் ஜெர்மனியில் குடியுரிமை வாங்க முடியும்..!!

இப்புதிய சட்ட திருத்தம் மூலம் ஜெர்மனியில் வெளிநாட்டவர் குடியுரிமை பெறும் விதிமுறைகளில் தளர்வுகளும், இரட்டை குடியுரிமை விதிமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளுக்கும் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தளர்வுகள் மூலம் ஜெர்மனியில் இருக்கும் நிறுவனங்கள் மிகவும் எளிதாகவும், அதிகளவிலும் திறமையான வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்த முடியும்.

ஜெர்மனி அரசு தற்போது திருத்தம் செய்துள்ள மாற்றங்கள் மூலம் ஒருவர் அந்நாட்டில் 5 வருடம் தங்கியிருந்தாலே குடியுரிமை பெற முடியும், இதேபோல் சிறப்புத் தனித் திறன் கொண்டவர்கள் வெறும் 3 வருடத்திலேயே குடியுரிமை பெற முடியும், முன்பு இது 8 மற்றும் 6 வருடங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ஜெர்மனியில் பிறக்கும் குழந்தையின் தாய் அல்லது தந்தை வெளிநாட்டவராக இருக்கும் பட்சத்தில் யாரேனும் ஒருவர் 5 வருடம் ஜெர்மனியில் தங்கியிருந்தாலே போதும், குழந்தைக்கு ஜெர்மனி குடியுரிமை பெற முடியும். முன்பு இப்பிரிவில் குழந்தைக்குக் குடியுரிமை பெற பெற்றோர் ஜெர்மனி குடியிருப்புக் காலம் 8 ஆண்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனி நாட்டு மக்கள் தொகையில் சுமார் 14 சதவீதம் பேர் அதாவது 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குடியுரிமை இல்லாமல் உள்ளனர், இதில் 5.3 மில்லியன் மக்கள் ஜெர்மனியில் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக வசித்து வருகிறார்கள் என்பதை விளக்கி இந்தச் சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஜெர்மனி நாட்டு நிறுவனங்கள் வழக்கத்தை விடவும் அதிகமான வெளிநாட்டினரை பணியில் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோடு இலங்கையில் இருந்து பல ஆயிரம் மக்கள் ஜெர்மனியில் வசித்து வரும் வேளையில் அவர்களுக்கும் குடியுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் ஜெர்மனியில் பல லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வரும் வேளையில் இவர்களுக்குக் குடியுரிமை பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது இந்தியர்களுக்கு ஜாக்பாட் ஆக உள்ளது.

Previous Post

நடிகையின் ஆபாச புகைப்படம் வெளியிட்ட வாலிபர் 2-வது முறையாக மீண்டும் கைது..

Next Post

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய அசோக் தன்வார் பாஜகவில் இணைந்தார்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினார் அசோக் தன்வார்!

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய அசோக் தன்வார் பாஜகவில் இணைந்தார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In