ஜெனிபர் லோபஸின் வரவிருக்கும் வெளியீடான திஸ் இஸ் மீ நவ்: எ லவ் ஸ்டோரியின் (This Is Me…Now: A Love Story) ட்ரெய்லர் ஒரு ஆச்சரியத்தைக் கொண்டுள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி பிரைம் வீடியோவில் திரையிடப்பட உள்ள இந்தப் படத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவும் நடித்துள்ளார்.
வரவிருக்கும் இந்த படத்தின் டிரெய்லரில் மற்ற நடிகர்களுடன் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனரின் பெயரும் (சத்குரு)உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெனிபர் லோபஸ் இன்ஸ்டாகிராமில் டிரெய்லரைப் பகிர்ந்து கொண்டார், மேலும் படத்தை “நான் செய்த மிக தனிப்பட்ட விஷயம்” என்று அழைத்தார்.

தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி, “இயக்குநர் டேவ் மேயர்ஸுடன் இணைந்து, ஜெனிஃபர் புராணக் கதைசொல்லல் மற்றும் தனிப்பட்ட குணப்படுத்துதலில் மூழ்கியிருக்கும் ஒரு கதை சார்ந்த சினிமா ஒடிஸியை உருவாக்கியுள்ளார் என்று கூறினார்.
இப்படத்தில் பென் அஃப்லெக், ட்ரெவர் நோவா, சோபியா வெர்கரா, கேகே பால்மர், போஸ்ட் மலோன், நீல் டி கிராஸ் டைசன், கிம் பெட்ராஸ் மற்றும் டெரெக் ஹக் ஆகியோர் நடித்துள்ளனர்.

