ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 3.,500 கிலோ ‘சூடோபெட்ரைன்’ எனும் போதைப் பொருளை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்திய வழக்கில் திமுக முன்னாள் நிா்வாகி ஜாபா் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினா் (என்.சி.பி.) கடந்த மார்ச் 9 ஆம் தேதி தில்லியில் வைத்து கைது செய்தனா்.
இதையடுத்து, இந்த சா்வதேச போதைப்பொருள் கடத்தல் மோசடியை விசாரிக்க அமலாக்க இயக்குநரகம், ஜாபா் சாதிக் மீது சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. மேலும் மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறையினர் ஜாபா் சாதிக்கை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி தில்லி அலுவலகத்தில் ஆஜராகும்படி அமீருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. ஜாபர் சாதிக் தயாரிக்கும் படத்தை இயக்குனர் அமீர் இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.


கமெண்ட்ஸ் செய்ய விரும்பவில்லை