புதுடில்லி: ‛‛அண்டை நாடுகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு ” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜெய்சங்கர் பேசியதாவது: சில அண்டை நாடுகளுடனான உறவில் சிக்கல் இருப்பது எனக்கு தெரியும். நமது அண்டை நாடு ஒவ்வொன்றுக்கும் இந்தியாவைப் பற்றி நல்ல அனுபவங்கள் உள்ளன. நிறைய நல்ல விஷயங்களை கூறுவார்கள்.
அமெரிக்க அதிபர் இந்திய குடியரசு தினத்திற்கு இந்தியாவிற்கு வர மறுத்ததையுமே ஜெயஷங்கர் குறியீடாக கூறுகிறார். தற்போது அமெரிக்காவும் இந்தியாவும் ஒருவகையான பிணக்கில் உள்ளதற்கு காரணம் அமெரிக்க குடிமகனான சீக்கிய காலிஸ்தான் தீவிரவாதி பன்னும் என்பவரை இந்தியா கொலை செய்ய அமெரிக்க மண்ணில் திட்டமிட்டதேயாகும்.
அண்டை நாடுகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு. தினமும், அந்நாடுகள் எல்லா விஷயங்களிலும் நம்முடன் உடன்படுவார்கள் என எதிர்பார்க்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.
சீனா உடனான நமது உறவு இன்று இருப்பதை விட சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் உறவு சிக்கலானதாக மாறியதற்கு நாங்கள் காரணம் அல்ல. எல்லை தொடர்பான ஒப்பந்தங்களை மதிக்கக்கூடாது என அவர்கள் எடுத்த முடிவே காரணம்.
அண்டை நாடுகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு சவாலாக இருந்தாலும், நீங்கள் ஒரு போதும் கைவிடக்கூடாது என்பதே ராஜதந்திரம். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

