Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் அல்ல…" – வைரலாகும் உத்தரப்பிரதேச ஆளுநரின் பேச்சு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 19, 2024
in அரசியல் செய்திகள்
0
“விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் அல்ல…" – வைரலாகும் உத்தரப்பிரதேச ஆளுநரின் பேச்சு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உத்தரப்பிரதேசத்தின் ஆளுநராக பதவி வழங்கப்பட்டவர் ஆனந்த்பென் படேல். இவர் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் உள்ள காஜா மொய்தீன் சிஷ்தி பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “புத்தரின் பூமியான இந்தியா எப்போதும் மோதலை விட அமைதியின் பாதையை தேர்ந்தெடுத்து வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையில் நாடு கல்வி மற்றும் ஆராய்ச்சியில் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்தியாவின் கொள்கைகள் உலக அரங்கில் தேசத்தின் அந்தஸ்தை உயர்த்தியிருக்கிறது.

யோகி ஆதித்யநாத் – ஆனந்திபென் படேல்

உத்தரப்பிரதேச பல்கலைக்கழகங்கள் தேசிய மற்றும் சர்வதேச தரவரிசையில் சிறப்பாக செயல்படுகிறது. மாணவர்கள் தங்கள் முன்னோர்கள் செய்த இணையற்ற ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள பண்டைய இந்திய நூல்களைப் படிக்க வேண்டும். இந்தியாவின் முனிவர்கள் மற்றும் அறிஞர்கள் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கி, இன்றும் உலகிற்கு நன்மை செய்கிறார்கள். அதற்கு உதாரணமாக வேதகால முனிவர் பரத்வாஜை காணலாம். முதன்முதலில் விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் அல்ல. அதைக் கண்டுபிடித்தவர் முனிவர் பரத்வாஜ்தான். ஆனால் கண்டுபிடிப்புக்கான பெருமை வேறொரு நாட்டிற்கு வழங்கப்பட்டுவிட்டது.

வேத காலத்தைச் சேர்ந்த முக்கியமான ரிஷியான இவர் இந்து இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் குறிப்பிடப்படுகிறார். ராவணனின் சகோதரன் கும்பகர்ணன் தூங்கிக்கொண்டிருந்ததாக படித்திருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. அவர் ரகசியமாக ஆராய்ச்சி செய்து, ஆயுதங்களை கண்டுபிடிப்பார். அதனால்தான், ஆறு மாதங்களுக்கு கும்பகர்ணன் மக்களின் கண்களில் படக் கூடாது என ராவணன் உத்தரவிட்டிருந்தார். எனவே, பழங்கால இந்தியாவின் நூல்களை மாணவர்கள் படிக்க வேண்டும். இந்த அறிவு இந்திய மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனந்திபென் படேல்

அவற்றைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கவும் பல்கலைக்கழகங்கள் முன்வர வேண்டும்.” எனப் பேசினார்.

விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஆர்வில் ரைட், வில்பர் ரைட் இருவரும் இணைந்து டிசம்பர் 17, 1903 அன்று அமெரிக்காவின் வட கரோலினாவில் முதன்முதலில் விமானத்தை இயக்கியவர்கள். ஆனால், சில பா.ஜ.க தலைவர்கள் ராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ள ‘புஷ்பக விமானம்’ தான் முதல் விமானம் எனக் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Manipur: `பிடிவாதத்தை கைவிட்டு மோடி மணிப்பூர் செல்ல வேண்டும்” – ப. சிதம்பரம் சொல்வதென்ன?



.

Previous Post

யாருக்கும், எதற்கும் பயமில்லை..! பாஜகவில் சேர்ந்தது குறித்து கைலாஷ் கெலாட் பேட்டி!

Next Post

அமரன் வெற்றி..!படக்குழுவினருக்கு விருந்து வைத்த சிவகார்த்திகேயன்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமரன் வெற்றி..!படக்குழுவினருக்கு விருந்து வைத்த சிவகார்த்திகேயன்!

அமரன் வெற்றி..!படக்குழுவினருக்கு விருந்து வைத்த சிவகார்த்திகேயன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In