Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“சில இந்துக்களுக்கு இஸ்லாமிய வெறுப்புணர்வு இருப்பது உண்மைதான்" – ஹிமந்த பிஸ்வா சர்மா சர்ச்சை பேச்சு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 31, 2024
in அரசியல் செய்திகள்
0
“சில இந்துக்களுக்கு இஸ்லாமிய வெறுப்புணர்வு இருப்பது உண்மைதான்" – ஹிமந்த பிஸ்வா சர்மா சர்ச்சை பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் பா.ஜ.க-வின் நட்சத்திர பேச்சாளரும், அஸ்ஸாம் மாநில முதல்வருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருகிறார். சமீபத்திய அவருடைய பிரசாரத்தில், `பா.ஜ.க ஆட்சியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது போல வாரணாசியில் மசூதி உள்ள இடத்தில் பாபா விஸ்வநாத் கோயில் கட்டப்படும். கடந்த முறை 300 இடங்களை பெற்றோம். அதனால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டினோம்.

ஹிமந்த பிஸ்வா சர்மா

அடுத்து இந்த முறை 400 இடங்களை வென்று, உ.பி மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமி இடத்தில் கிருஷ்ணர் கோயிலும், பிறகு வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்கு பதிலாக பாபா விஸ்வநாத் இந்து கோயிலும் கட்டப்படும். முஸ்லிம் சமூகத்தின் பெரும் பகுதியினரை இந்து வெறுப்பாளர்களிலிருந்து இந்துக்களுடன் இணைந்து வாழக்கூடியவர்களாக மாற்றியுள்ளேன்… அதனால் லவ் ஜிகாத், நில அபகரிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன. அஸ்ஸாமை முன்மாதிரி மாநிலமாக மாற்றியிருக்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

இந்த நிலையில், தனியார் செய்திக்கு அளித்த பேட்டியில்,“நாட்டில் உள்ள இந்துக்கள் சிலருக்கு இஸ்லாமோஃபோபியா (இஸ்லாமிய வெறுப்பு இருப்பது) உண்மை. மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படுபவர்களால் அதை எதிர்கொள்ள முடியாது. முஸ்லிம்களால் மட்டுமே அதை கட்டுப்படுத்த முடியும். மோடி காசி வழித்தடத்தை நிர்மாணிப்பதால், அனைவரும் அங்கு செல்கிறார்கள். காசிக்குப் போன இந்து, ஞானவாபி மசூதியைப் பார்க்கிறார். மசூதி தொடர்பாக கேள்விகளைக் கேட்கிறார்கள்.

ஹிமந்த பிஸ்வா சர்மா

அதன் விவரங்களை கேட்டு கோபமாக திரும்பி வருகிறார்கள். மதுராவில் ஷாஹி ஈத்கா அதே இடத்தில் தொடர்ந்து இருந்தால். அங்கு வரும் இந்துக்கள் இயல்பாகவே கோபமடைவார்கள்… முஸ்லிம்கள் அந்த ஷாஹி ஈத்காவை வேறு இடத்திற்கு மாற்றட்டும். அதன்பிறகு ​​மதுராவுக்கு வரும் இந்து முஸ்லீம் சமூகத்தின் மீது நன்றியுடன் இருப்பார். இந்த இடமாற்றம் பலத்தால் நடத்த முடியாது.

ஆனால் பலவந்தமாக மஸ்ஜிதை வேறு இடத்திற்கு மாற்றாமல், இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையேயான ஆலோசனையின் மூலம் மட்டுமே நடக்கும். எனவே மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படுபவர்கள், இந்துக்களை விமர்சிப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவில் இஸ்லாமோஃபோபியாவை கட்டுப்படுத்த முடியாது.” என சர்ச்சை கருத்தை தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

`மக்களோட மதம்தான் வேற, ஆனா மனசு ஒண்ணுதான்!’ – இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ முறையில் திருமணம் செய்த VAO



.

Previous Post

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல் – News18 தமிழ்

Next Post

ஜூலை 12-ல் அனந்த் அம்பானி – ராதிகா திருமணம் – News18 தமிழ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜூலை 12-ல் அனந்த் அம்பானி – ராதிகா திருமணம் – News18 தமிழ்

ஜூலை 12-ல் அனந்த் அம்பானி - ராதிகா திருமணம் – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In