Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`அதானி வீட்டுக்குச் சென்றது உண்மைதான், ஆனால்…!' – அஜித் பவாரின் குற்றச்சாட்டு குறித்து சரத் பவார்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 15, 2024
in அரசியல் செய்திகள்
0
`அதானி வீட்டுக்குச் சென்றது உண்மைதான், ஆனால்…!' – அஜித் பவாரின் குற்றச்சாட்டு குறித்து சரத் பவார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த 2019ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே முதல்வர் பதவி தொடர்பாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து, பா.ஜ.க உடன் சேர்ந்து ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது என்று துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்திருக்கும் கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பா.ஜ.க கூட்டணி ஆட்சியமைப்பது தொடர்பாக தொழிலதிபர் கெளதம் அதானியின் டெல்லி வீட்டில் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதில் சரத் பவாரும் கலந்து கொண்டதாக அஜித் பவார் தெரிவித்து இருந்தார். அஜித் பவாரின் கருத்து குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் அளித்துள்ள பேட்டியில், ”டெல்லியில் அதானி வீட்டிற்கு சென்றது உண்மைதான். அதானி தனது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் பங்கேற்பதற்காகத்தான் அவரது வீட்டிற்கு சென்றேன்.

அங்கு அரசியல் தொடர்பான ஆலோசனைக்காக செல்லவில்லை” என்று தெரிவித்துள்ளார். ஆனால் டெல்லி சந்திப்பு குறித்து இணைய தளம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், டெல்லியில் அதானி வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சரத் பவாரும், அவரது கட்சியின் மூத்த நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களிடம் பா.ஜ.க தலைவர்கள் உங்களது கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் மீது ஊழல் வழக்கு இருக்கிறது. நீங்கள் பா.ஜ.க கூட்டணி அரசில் சேர்ந்தால் அந்த வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்துவிடுவதாக உறுதியளித்துள்ளனர். ஆனால் பா.ஜ.க தலைவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்களா என்ற சந்தேகத்தில் சரத் பவார் அவர்களின் திட்டத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் பின் வாங்கிவிட்டதாக சரத் பவார் சொன்னதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

ஆனால் சரத் பவார் விருந்துக்கு சென்றதாக இப்போது மாற்றி பேசுவதாக அஜித் பவார் கட்சி தலைவர்கள் விமர்த்தித்துள்ளனர். இவ்விவகாரத்தில் சரத் பவார் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக இப்பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டி இருக்கிறார். அதோடு இக்கூட்டத்தில் அதானியே பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ”டெல்லியில் நடந்த பொதுக்கூட்டம் அதானி வீட்டில் நடக்கவில்லை. அதோடு அக்கூட்டத்தில் அதானியும் பங்கேற்கவில்லை. பா.ஜ.க தலைவர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மட்டும்தான் அதில் பங்கேற்றோம். இக்கூட்டம் பல மணி நேரம் நடந்தது.

அதில் அமைச்சரவை, இலாகா ஒதுக்கீடு, மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. அனைத்தும் முடிவு செய்யப்பட்ட நிலையில் சரத் பவார் திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டார். இது உண்மையில் சரத் பவார் எங்களுக்கு செய்த துரோகமாகும். ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் தான் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டது. அதுவும் சரத் பவாரிடம் கேட்டுவிட்டுத்தான் செய்தோம்” என்றார்.

2023ம் ஆண்டு பா.ஜ.க கூட்டணி அரசில் பங்கேற்க முடிவு செய்தபோது தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்று துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாசிக்கில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் மேலும் கூறுகையில், “மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு பா.ஜ.க கூட்டணி அரசில் சேர முடிவு செய்தபோது அதற்கு ஒப்புதல் தெரிவித்துவித்து தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கையெழுத்தும் போட்டுக்கொடுத்தார்கள்.

தற்போது சரத் பவார் கட்சியில் இருக்கும் ஜெயந்த் பாட்டீல் கூட கையெழுத்து போட்டுக்கொடுத்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். அஜித் பவார் தேர்தல் நேரத்தில் அதானி பிரச்னையை கிளப்பியது பா.ஜ.கவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே மகாராஷ்டிரா கட்சிகளை பா.ஜ.க உடைத்தது என்ற விமர்சனம் இருக்கிறது. இப்போது ஆட்சியமைப்பு பேச்சுவார்த்தையில் அதானியும் பங்கேற்றார் என்ற செய்தியை அஜித் பவார் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது பா.ஜ.க-விற்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

`அதானி இல்லத்தில்
5 முறை சந்திப்பு; அதில் சரத் பவாரும் இருந்தார்!’ – அஜித் பவார் அதிர்ச்சி தகவல்



.

Previous Post

பயிற்சி ஆட்டத்தில் ராகுலுக்கு காயம்! கோலி காயத்தால் ஸ்கேன் செய்ய சென்றாரா?

Next Post

திறக்கப்படும் பாதியளவு சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸவே – தமிழ்நாட்டு சாலை எப்போது பயன்பாட்டுக்கு வரும்? | Karnataka Ready to open 72 km stretch of Chennai-Bengaluru expressway, What About Tamil Nadu Part

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திறக்கப்படும் பாதியளவு சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸவே – தமிழ்நாட்டு சாலை எப்போது பயன்பாட்டுக்கு வரும்? | Karnataka Ready to open 72 km stretch of Chennai-Bengaluru expressway, What About Tamil Nadu Part

திறக்கப்படும் பாதியளவு சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸவே - தமிழ்நாட்டு சாலை எப்போது பயன்பாட்டுக்கு வரும்? | Karnataka Ready to open 72 km stretch of Chennai-Bengaluru expressway, What About Tamil Nadu Part

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In