இந்திய அகழ்வாராய்ச்சி துறை (ASI )வாரணாசி நீதிமன்றத்தில் அளித்த ஞானவாபி மசூதி குறித்த ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் வெளியிடுவதை 4 வாரங்களுக்கு நிறுத்த வலியுறுத்தியுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் டிசம்பர் 18 ஆம் தேதி உத்தரவின்படி 1991 ஞானவாபி மசூதி வழக்கிலும் ASI தனியாக தனது கணக்கெடுப்பை சமர்பிக்கவேண்டும் எனவே அந்த 1991 வழக்கில் சமர்பிப்பதற்கு முன், தற்போதைய வழக்கில் தனது கணக்கெடுப்பை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவது பொருத்தமற்றதாக இருக்கும், இதனால் வதந்திகள் மற்றும் தவறான செய்திகள் பரவுவதற்கு வழிவகுக்கும் இவைகள் ASI இன் தற்போதைய பணியை பாதிக்கும் என்று கூறப்பட்டது.
வாரணாசி மாவட்ட நீதிபதியின் ஜூலை 21 ஆம் தேதி உத்தரவின்படி ASI வாரணாசியில் உள்ள ஞானவாபி வளாகத்தில் ஒரு அறிவியல் ஆய்வு நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ‘ஷிவ்லிங்கம்’ கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘வுசுகானா’ பகுதியைத் தவிர்த்து, வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை ஆய்வு செய்வதை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ஏஎஸ்ஐ) ஆகஸ்ட் 4 அன்று, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும், கட்டிடத்திற்கு சேதம் ஏற்படாது என்றும் ASI சார்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டு, ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ASI கணக்கெடுப்பை அனுமதித்த அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை (ஆகஸ்ட் 3) எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி (வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை நிர்வகிக்கிறது) தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யும் போது நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.
ஜூலை 21 அன்று, வாரணாசி மாவட்ட நீதிபதி, இந்திய தொல்லியல் துறை இயக்குனருக்கு ஒரு இந்து கோவிலின் இருக்கும் கட்டமைப்பின் மீது மசூதி கட்டப்பட்டுள்ளதா என்று ஆராய்ச்சி செய்ய உத்தரவிட்டார், அந்த ஆராய்ச்சி முடிவுகள் சீல் வைக்கப்பட்ட உறையில் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

