Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

குற்றவாளிகளுடன் பாஜக நிற்பது வெட்கக்கேடானது! – ராகுல்காந்தி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 28, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
குற்றவாளிகளுடன் பாஜக நிற்பது வெட்கக்கேடானது! – ராகுல்காந்தி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்தாண்டு, மத்தியப் பிரதேசத்தில் தலித் சிறுமி ஒருவர் பாஜகவினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, நீதி பெறாமல் மரணமடைந்ததைச் சுட்டிக் காட்டி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி, அப்பதிவில் ”மத்தியப் பிரதேசத்தில் உள்ள தலித் குடும்பத்திற்கு பாஜக தலைவர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி நினைத்தால் என் இதயம் வலியாலும் கோபத்தாலும் நிரம்பி வழிகிறது.

பாஜக, பாதிக்கப்பட்டவர்களுக்கு பதிலாக, எப்போதும் குற்றவாளிகளுடன் நிற்பது வெட்கக்கேடானது. சட்டத்தின் மூலம் நீதியைப் பெற முயலும் ஒவ்வொரு நபரின் தைரியத்தையும் இதுபோன்ற சம்பவங்கள் உடைக்கின்றன. ஒடுக்குமுறைக்கு எதிராக, குரலை வலுவாக உயர்த்தக்கூடிய ஓர் அமைப்பை நாங்கள் உருவாக்குவோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நீதியானது பணம் மற்றும் அதிகாரத்தை சார்ந்திருப்பதை நாம் அனுமதிக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

नरेंद्र मोदी ने ‘कानून का राज’ खत्म कर दिया है।

मध्यप्रदेश में इस दलित परिवार के साथ भाजपा नेताओं ने जो किया है वो सोच कर ही मन पीड़ा और क्रोध से भर गया।

यह शर्म की बात है कि भाजपा के राज में सरकार पीड़ित महिलाओं की जगह हमेशा उनके गुनहगारों के साथ खड़ी मिलती है।

ऐसी घटनायें हर… https://t.co/rNpn5OAiOZ

— Rahul Gandhi (@RahulGandhi) May 28, 2024

கடந்தாண்டு, மத்தியப் பிரதேசத்தில் பாஜகவினர் ஒரு தலித் சிறுமியை பாலியல் துன்புறுத்தி, அதனை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் மிரட்டியிருந்தனர். சிறுமி தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தை விவரித்த பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, பாஜகவினர் சிறுமியின் குடும்பத்தினரை வழக்கினைத் திரும்பப் பெறுமாறு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். குடும்பத்தினர் சமரசத்திற்கு உடன்படாதபோது, சிறுமியின் சகோதரர் கொல்லப்பட்டார். சில நாள்களுக்குப் பிறகு, சிறுமியின் மாமா சமரசத்திற்கு அழைக்கப்பட்டு, அவரும் கொல்லப்பட்டார்.

சிறுமி ஆம்புலன்ஸில் தனது மாமாவின் உடலுடன் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தபோது சிறுமியும் ஆம்புலன்ஸிலிருந்து விழுந்து இறந்துவிட்டார். ஒரு வருடத்திற்குள், இரண்டு கொலைகள் நடந்துள்ளன. பாஜகவினர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றம் சாட்டிய ஒரு தலித் சிறுமி சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணமடைந்தார்.

मध्य प्रदेश में BJP का जंगलराज

पहले BJP के नेताओं ने एक दलित लड़की का यौन उत्पीड़न किया और फिर उसे धमकाते रहे कि ये बात किसी से मत कहना।

डरी-सहमी लड़की ने ये बात अपने परिवार को बताई और फिर तमाम मशक्कत के बाद FIR हुई।

इसके बाद से BJP के नेता दलित परिवार पर समझौते का दबाव बनाने… pic.twitter.com/kGLFO6zmKD

— Congress (@INCIndia) May 27, 2024

தலித் மாணவிக்கு நேர்ந்த துயரம்: பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை





.

Previous Post

`சீமான் சவாலுக்கு அண்ணாமலை பதில்..!’ – தொடரும் நா.த.க – பா.ஜ.க வார்த்தைப் போர்! | Annamalai Says “I Respect Seeman, His Voice is Important”

Next Post

Fact Check : ராகுல் காந்தியின் செல்ஃபியில் இயேசு கிறிஸ்துவின் படமா? சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்? உண்மை என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Fact Check : ராகுல் காந்தியின் செல்ஃபியில் இயேசு கிறிஸ்துவின் படமா? சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்? உண்மை என்ன?

Fact Check : ராகுல் காந்தியின் செல்ஃபியில் இயேசு கிறிஸ்துவின் படமா? சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்? உண்மை என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In