இந்திய பிரதமர் ஒருவர் கடைசியாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்று, பதிலளித்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகின்றன. கடைசியாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2014 ஜனவரி 3-ம் தேதி பங்கேற்றதே கடைசி பத்திரிகையாளர் சந்திப்பாகும்.
அதில் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களையும், 62 திட்டமிடப்படாத கேள்விகளையும் அவர் எதிர்கொண்டதாக, மன்மோகன் சிங்கின் தகவல் தொடர்பு ஆலோசகராக இருந்த பன்கஜ் பச்சோரி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

