Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விண்வெளியில் தாவரங்களை வளர்த்து சாதனை… புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 5, 2025
in அரசியல் செய்திகள்
0
விண்வெளியில் தாவரங்களை வளர்த்து சாதனை… புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



Last Updated:January 05, 2025 8:06 AM IST

ISRO Achievement | விண்வெளியில் தாவரம் வளர்ப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள இஸ்ரோ, செயற்கைக்கோள்களுடன் சேர்த்து காராமணி விதைகளையும் விண்ணுக்கு அனுப்பியது.

News18

விண்வெளியில் தனக்கென தனி ஆய்வு மையத்தை நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஸ்பேஸ் டாக்கிங் திட்டத்தில் இரண்டு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.

ராக்கெட்டில் இருந்து இரண்டு செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக பிரிந்தன. அவை பூமியை சுற்றிவரும் நிலையில், இரண்டுக்குமான தொலைவு தற்போது இரண்டு கிலோ மீட்டராகக் கணக்கிடப்பட்டுள்ளது. அந்த இரண்டு விண்கலன்களையும் ஒருங்கிணைக்கும் பணி ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

விண்வெளியில் தாவரம் வளர்ப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள இஸ்ரோ, செயற்கைக்கோள்களுடன் சேர்த்து காராமணி விதைகளையும் விண்ணுக்கு அனுப்பியது. விண்ணுக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகள் நான்கு நாட்களில் முளைத்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ள இஸ்ரோ, விரைவில் இலை வரும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

🇮🇳 #RRM_TD, India’s first space robotic arm, is in action onboard #POEM4! A proud #MakeInIndia milestone in space robotics. 🚀✨ #ISRO #SpaceTech pic.twitter.com/sy3BxrtRN1


— ISRO (@isro) January 4, 2025

இந்த டாக்கிங் செயற்கைக்கோள்களுக்கு அடுத்தபடியாக அனுப்பப்பட்ட 24 உப செயற்கைக்கோள்களும் 355 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டன. அதில் ஒன்றுதான் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட RRM-TD எனப்படும் ரோபோட்டிக் கரங்கள். இந்த ரோபோ முதல் கட்டமாக கரங்களைக் கொண்டு பொருட்களை கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

இதையும் படிக்க: இந்தியாவின் பணக்கார முதல்வர் யார் தெரியுமா? ஸ்டாலினுக்கு எந்த இடம்?

இந்நிலையில் ரோபோட்டிக் கரங்கள் தனது செயல்பாட்டை சிறப்புற தொடங்கியுள்ள நிகழ்வை காணொளியாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

First Published :

January 05, 2025 8:06 AM IST





.

Previous Post

‘இதில் எது ஒரிஜினல் கே.பி.? தன் நெஞ்சே தன்னைச் சுடாதா?’ மார்க்சிஸ்ட் கம்யூ., மீது பாய்ந்த முரசொலி!

Next Post

இரவில் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம்.. காலையில் அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இரவில் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம்.. காலையில் அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு!

இரவில் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம்.. காலையில் அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In