Last Updated:
சந்திரயான்-5 திட்டத்திற்கு ஜப்பான் இந்தியாவை அணுகியது ஏன் என இஸ்ரோ தலைவர் நாராயணன் சிஎன்என் நியூஸ்18க்கு பிரத்தியேகமாக விளக்கம் அளித்துள்ளார்.
நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 5 திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதனை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) ஆகிய இரண்டும் இணைந்து செய்யப்போகிறது. இதற்கான கூட்டு ஒப்பந்தம் சமீபத்தில் ஒப்பந்தமானது. இதன் மூலம், இந்தியாவின் விண்வெளி லட்சியங்கள் புதிய உயரங்களை எட்டியுள்ளன. குறிப்பாக வெற்றிகரமான சந்திரயான்-3 ஐத் தொடர்ந்து, இந்தியாவின் விண்வெளித் திறன்களுக்கான சர்வதேச அங்கீகாரம் அதிகரித்து வருவதை இது குறிக்கிறது.
இது தொடர்பாக CNN-News18-க்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்த இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், ஜப்பானியர்கள் இந்த திட்டத்திற்காக இந்தியாவை எவ்வாறு அணுகினர் மற்றும் அதில் என்ன இருக்கிறது என்பதை விளக்கினார்.
“இது ஒரு கூட்டுப் பணி. வலிமையானது எப்போதும் வலிமையானதை மதிக்கும்” என்று ஜப்பான் – இந்தியா கூட்டு முயற்சி குறித்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், “சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினோம். இதன் மூலம், சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் மென்மையாக தரையிறங்கிய ஒரே நாடாகவும், சந்திரனில் மென்மையாக தரையிறங்கிய நான்காவது நாடாகவும் இந்தியா மாறியது. இந்நிலையில், JAXA குழு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறியது. எனவே, நாங்கள் அந்த பணியை இணைந்து நிறைவேற்றி வருகிறோம். சந்திரயான்-5 ஜப்பானிய ராக்கெட் மற்றும் ஏவுகணை மூலம் ஏவப்பட உள்ளது.
சந்திரயான்-3-ல் சுமார் 25 கிலோ எடைக்கொண்ட ரோவரை அனுப்பினோம். தற்போது சந்திரயாந்5ல் 350 கிலோ எடையுள்ள ரோவர் இருக்கும்” என்றார். மேலும், இது சந்திர துருவப் பகுதியில் மேலும் ஆய்வு செய்யவும், நீர் இருப்பை ஆராயவும் கவனம் செலுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
“சந்திரயான்-3 காரணமாக, எங்களுக்கு 14 நாட்கள் மட்டுமே இருந்தன. அதில், புள்ளிவிவரங்களை சேகரிக்க முடிந்தது. எங்கள் சக ஊழியர்கள் மூலம் எங்களுக்கு நிறைய கண்டுபிடிப்புகள் கிடைத்தன. எலக்ட்ரான் மேகங்களைக் கண்டுபிடித்துள்ளோம், சில இடங்களில் நில அதிர்வு செயல்பாட்டைக் கண்டறிந்துள்ளோம். வெப்ப விவரக்குறிப்பைக் கண்டுபிடித்துள்ளோம், அதை வரைபடமாக்கியுள்ளோம், அதேபோல், நிறைய அறிவியல் கண்டுபிடிப்புகள் இருந்தன. தற்போது, சந்திரயான் – 5ன் மூலம் நீர் கிடைக்கும் தன்மையைப் புரிந்துகொள்வது உள்ளிட்ட பல விஷயங்களை ஆய்வு செய்ய முடியும்” என்று நாராயணன் கூறினார்.
இதையும் படியுங்கள் : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லப்படுவாரா? நிபுணர்கள் கூறுவது என்ன?
சந்திரயான்-5 அறிவிப்புடன் கூடுதலாக, இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யானின் முன்னேற்றம் குறித்த தகவல்களையும் நாராயணன் கூறினார். “உங்களுக்குத் தெரியும், ககன்யான் பணியை நிறைவேற்ற, நிறைய விஷயங்கள் செய்யப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
March 18, 2025 3:08 PM IST
Exclusive: சந்திரயான்-5 திட்டத்திற்கு இந்தியாவை ஜப்பான் அணுகியது ஏன்? விளக்கமளித்த இஸ்ரோ தலைவர் நாராயணன்

