Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நள்ளிரவில் இரு பெண்களை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை..! சுற்றுலா வந்த இஸ்ரேல் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நாட்டை உலுக்கிய சம்பவம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 10, 2025
in அரசியல் செய்திகள்
0
நள்ளிரவில் இரு பெண்களை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை..! சுற்றுலா வந்த இஸ்ரேல் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நாட்டை உலுக்கிய சம்பவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கர்நாடக மாநிலம் ஹம்பியில், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச புராதனச் சின்னங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அங்கு, துங்கபத்ரா ஆற்றங்கரையோரம் இயற்கை அழகைக் கண்டு ரசிக்க வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளும் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை அன்று ஹம்பி அருகே சானாபூர் ஏரி பகுதியில் இரண்டு பெண்கள் மற்றும் 3 ஆண்கள் கூட்டாக சுற்றுலா சென்றனர். அவர்களில் இஸ்ரேலைச் சேர்ந்த 27 வயதான பெண், அமெரிக்க சுற்றுலாப் பயணி டேனியல் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பெண் உட்பட 5 பேரும் இரவு 11.30 மணியளவில் ஏரி பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, உள்ளூரைச் சேர்ந்த 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்கள், சுற்றுலாப் பயணிகள் இருந்த இடத்திற்குச் சென்று, தங்கள் வண்டிக்கு பெட்ரோல் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் இல்லை என்று கூறியதும், “அப்போ நூறு ரூபாய் கொடுங்கள்” என்று கேட்டு வம்பிழுத்துள்ளனர். மூன்று பேரும் வேண்டும் என்றே விதண்டாவாதம் பேசியதை உணர்ந்த சுற்றுலாப் பயணிகள் அவர்களிடம் விலகிச் செல்ல முற்பட்டுள்ளனர்.

ஆனால், அந்த கும்பல், சுற்றுலாப் பயணிகளிடம் வாக்குவாதம் செய்துள்ளது. ஒரு கட்டத்தில் பெண்களுடன் வந்த 3 ஆண்களையும் கால்வாயில் தள்ளிவிட்டுள்ளனர். பின்னர், இஸ்ரேல் சுற்றுலாப் பயணி உட்பட இரு இளம் பெண்களையும் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சம்பத்தின் போது கால்வாயில் தள்ளிவிடப்பட்ட அமெரிக்க பயணி டேனியல் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பஞ்சஜ் ஆகிய இருவரும் நீந்திக் கரையேறினர். ஒடிசாவைச் சேர்ந்த பிபாஷ் என்பவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதையடுத்து தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். பாலியல் வன்கொடுமை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார், தனிப்படை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இதையும் படிக்க: மணிப்பூரில் மீண்டும் கலவரம்… துப்பாக்கி சூடு சம்பவத்தால் பதற்றம்

சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களைச் சேகரித்த போலீசார், இளம் பெண்கள் கொடுத்த அங்க அடையாளத்தின் அடிப்படையில் குற்றவாளிகளைப் பிடிக்கத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட பிபாஷ், 24 மணி நேரத்துக்குப் பின் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். எஞ்சிய ஒருவரை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஹம்பி அருகே இஸ்ரேல் சுற்றுலாப் பயணி உட்பட இரு இளம் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

First Published :

March 09, 2025 12:38 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

நள்ளிரவில் இரு பெண்களை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை..! சுற்றுலா வந்த இஸ்ரேல் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நாட்டை உலுக்கிய சம்பவம்



.

Previous Post

Madurai Weather 10 March 2025: மதுரை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.12°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

தினம் தினம் திருநாளே!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

தினம் தினம் திருநாளே!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In