Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஈரானில் அணுசக்தி தளவாடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: வான்வெளி 3-ஆவது நாளாக மூடல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 15, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஈரானில் அணுசக்தி தளவாடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: வான்வெளி 3-ஆவது நாளாக மூடல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஈரான் தலைநகா் தெஹ்ரானில் உள்ள அணுஆயுத தளங்கள், ஏவுகணை தயாரிப்பு ஆலைகள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று(ஜூன் 15) ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக இஸ்ரேல் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, இஸ்ரேல் போக்குவரத்து மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இஸ்ரேல் வான்வெளி பாதுகாப்பு காரணங்களுக்காக சிவில் விமானப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் வான்வெளியில் எந்தவொரு விமானங்களும் இயக்கபடவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான தீவிர சண்டையில், ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய மையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் இஸ்ஃபாஹான் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப்படை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது: “ஈரானின் இஸ்ஃபாஹான் பகுதியிலுள்ளதொரு அணுசக்தி தளவாடத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் தாக்குதல்களில், ஈரானில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான மோதலில், ஈரானில் 78 பேர் பலியானதுடன், 320-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், இஸ்ரேலில் 3 பேர் பலியானதுடன், 170-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறுகின்றனர்.

இஸ்ரேல்-ஈரான் நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால் இருநாடுகளிலும் வசிக்கும் இந்தியா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.



.

Previous Post

‘மருத்துவர் ஐயாவிற்கு தந்தையர் தின வாழ்த்துகள்’ – பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பேசியது என்ன?

Next Post

கணவரை பார்க்க லண்டன் சென்ற புது மணப்பெண் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கணவரை பார்க்க லண்டன் சென்ற புது மணப்பெண் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு

கணவரை பார்க்க லண்டன் சென்ற புது மணப்பெண் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In