தன்னுடன் இணைந்து செயல்படும் ஆதரவாளர்கள் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு சென்றால், அதன்பின்னர் ஒன்றும் செய்ய முடியாது என ஓ.பி.எஸ். உணர்ந்து கொண்டுள்ளார். எனவே தனது ஆதரவாளர்களை தக்கவைக்க வியூகங்களை வகுத்து வருகிறார்.
மேலும், தனது ஆதரவாளர்களை தக்கவைக்க ஓபிஎஸ் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க. கொடியில் சிறு சிறு மாற்றங்களை செய்து புதிய கொடியை வடிவமைக்க திட்டமிட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க அல்லது புரட்சித் தலைவர் அ.தி.மு.க என 2 பெயர்களை தேர்வு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது:- “எங்கள் அணியில் ஏற்கனவே 82 மாவட்ட செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கிளை செயலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். அ.தி.மு.க போல் ஒன்றிய அளவிலும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாசறை மற்றும் பேரவைக்கு நிர்வாகிகள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. எந்த சூழ்நிலையிலும் தனது ஆதரவாளர்களை கைவிடக்கூடாது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக உள்ளார். இதனால் தான் விரைவில் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். ஓ.பி.எஸ். தொடங்கவுள்ள புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க என பெயரிடுவதற்கு கூடுதல் வாய்ப்புகள் உள்ளன.


எத்தனையோ அரசியல் தலைவர்கள் புதியதாக கட்சி தொடங்கி காணாமல் போய்விட்டனர் அந்த வரிசையில் ஓ பன்னீர்செல்வம் வருகிறார் விரைவில் காணாமலும் போய்விடுவார்
அரசியலில் மக்களுக்கான கட்சிகள் பற்றாக்குறை ஆகிவிட்டது தற்பொழுது சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ளவும் வியாபாரரீதியாகவும் மாறிவிட்டது கொள்கையில்லாத கட்சிகள் தான் பெருகிவருகின்றது அரசியல் என்ற புனிதத்தை களங்கப்படுத்தி கூவமாகமாறிவிட்டது அரசியல் வியாபாரத்தில் வேலைவாய்ப்புகள் எளிதாக கிடைக்கின்றன தொடரட்டும் …