குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களின் கடற்கரைக்கு அருகே நெருங்கி வந்துள்ளது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் (சென்னை) க்கு மிகக் குளிர்ந்த இரவுகளில் ஒன்றை கொடுத்தப் பிறகு, இன்று மேகக் கூட்டங்களின் ஈரப்பதம் நிலப்பரப்புக்குள் நகர்ந்து சிறிது கதகதப்பான அனுபவத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது, ஆனால் மழை மேகங்களின் பெரும்பகுதி இன்னும் கடலில்தான் உள்ளது.
மீண்டும் அதேதான், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று அடுத்த சில மணிநேரங்களில் முதல் மழை வட சென்னையிலிருந்து தொடங்கி அதன்பிறகு நகரின் பிற பகுதிகளில் பெய்யும். அலுவலகம் செல்லும் மாணவர்களே மழை பெய்யும் என்று காத்திருக்காமல், நீங்கள் அலுவலகத்துக்கு தவறாமல் செல்லலாம்.
சென்னைக்குக் கடைசி மழையா?
சென்னைக்கு இதுவே கடைசி மழையாக இருக்குமா? என்றால் இல்லை. கிறிஸ்மஸ் பண்டிகைக்குப் பிறகு, 26-27 மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்றும் நாளையும் தான் சென்னைக்கு நல்ல மழை கிடைக்கப்போகிறது. பருவமழைக் காலத்தை நன்கு அனுபவித்துக்கொள்ளலாம், இதுதான் குடிநீர் ஆதாரங்களுக்கு அதிக நீர்வரத்தைக் கொடுக்கப்போகிறது என்று பதிவிட்டுள்ளார்.
