Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வட இந்திய பிரசாரங்களில் தென்னிந்தியாவை அவமதிக்கிறாரா மோடி?!| Is Modi insulting South India in North Indian campaigns?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 18, 2024
in அரசியல் செய்திகள்
0
வட இந்திய பிரசாரங்களில் தென்னிந்தியாவை அவமதிக்கிறாரா மோடி?!| Is Modi insulting South India in North Indian campaigns?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


2024 நாடாளுமன்றத் தேர்தல் நான்கு கட்டத்தைக் கடந்து ஐந்தாவது கட்டத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான பரப்புரையில் வட மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தலைவர்களின் பேச்சுகள் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கின்றன. அதில் சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி, “தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் இலவச பேருந்து பயணம் வழங்குகிறார்கள். தென் மாநிலங்களில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி வழங்கப்பட்டு இருப்பதால் மெட்ரோ ரயில்களில் கூட்டம் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து உ.பியில் பேசிய மோடி, “இந்தியா கூட்டணியினர் இங்கு வாக்கு கேட்கிறார்கள், தென்னிந்தியாவில் அவர்கள் உத்தரபிரதேச மக்களை அவமானப்படுத்துகிறார்கள், உபி மக்களை அபத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவமதிக்கிறார்கள்.

அவர்களின் கூட்டணி கட்சிகளான திமுக, கேரளாவில் இடதுசாரிகள், கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் தெலங்கானாவில் உத்தரப்பிரதேச மக்களுக்கு எதிராக தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். உத்தரபிரதேச மக்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யும் இந்திய கூட்டணி மக்களை மன்னித்து வாக்களிப்பீர்களா?” என்றார். இந்திய அணி சனாதன தர்மத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், “கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்துவரும் விடியல் பயணத் திட்டத்தைப் பகிரங்கமாக எதிர்க்கத் துணிந்திருக்கிறார் பிரதமர் மோடி. ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்திட்டு அறிமுகப்படுத்திய திட்டம் பயணச் சுதந்திரத்தைத் தந்ததோடு, பெண்களுக்குப் பலவகைகளிலும் ஏற்றத்தை அளித்திருக்கிறது. பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை எனப் புதுப்புரளி கிளப்பி இருக்கிறார். பிரதமர் பேசுவதைக் கவனித்தால் “உண்மை கிலோ என்ன விலை?” என்று கேட்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், 2019-இல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-ல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை.

சென்னை மெட்ரோ இரண்டாம்கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக்கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின்மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார். பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார் என்ற ஐயம் தோன்றுகிறது” என விமர்சனம் செய்திருந்தார்.

முதல்வரின் விமர்சனம் குறித்து பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “எதைத் தின்றால் பித்தம் தெளியும் எனப் பேசியிருக்கிறார் முதல்வர். தயாநிதி மாறன், பொன்முடி, எம்.பி. செந்தில் குமார் உள்ளிட்ட தி.மு.க-வினரும் அதன் கூட்டணிக் கட்சியினரும் வட இந்தியர்களை வடக்கர்கள், பானிபூரி விற்பவர்கள், கழிப்பறையைச் சுத்தம் செய்பவர்கள் எனவெல்லாம் பேசியிருக்கிறார்கள். சனாதனம் தர்மம் குறித்து பேசியது பற்றியெல்லாம் பிரசாரத்தில் சொல்லித்தானே ஆக வேண்டும்.

மெட்ரோவின் இணைய தளத்துக்கு சென்று பார்த்தாலே இவர்கள் எவ்வளவு பொய் சொல்கிறார்கள் என்பது தெரியும். மத்திய அரசின் ஒப்புதலைப் பெறவில்லை எனத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் அது கட்டுமான நிலையிலேயே இருக்கிறது, மாநில அரசின் திட்டம்.

அதனால், ஹைதராபத்தில் இலவச பேருந்து பயணம் மெட்ரோ பயணிகளைக் குறைக்கப் போகிறது என்பது குறித்தும், அதனால் மெட்ரோ எவ்வளவு பாதிக்கும் என்பதையும் எடுத்துக்கூறி அதிலிருந்து விலகியிருக்கிறது நிறுவனம். இலவசம்  இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டும், ஆனால், இவர்கள் பெண்களின் ஓட்டுக்காக இலவசம் கொடுக்கிறார்கள். எல்லோருக்கும் இலவசம் எனச் சொல்வதே தவறு. ஒரே இடத்துக்கு வேலைக்கு செல்லும் ஆணுக்கு கட்டணம் பெண்ணுக்கு இலவசம் என்பது எப்படி சம நீதியாகும். உத்தரபிரதேசத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசம் எனச் சொன்னதைப்போல இங்கும் செய்யலாம். முதலில் பேருந்துகளைச் சரிசெய்துவிட்டு பிறகு இதையெல்லாம் பேசலாம்.

 நாராயணன் திருப்பதி நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி

மிகப்பெரியளவில் செலவு செய்துவிட்டு அதை நஷ்டப்படுத்தும் வேலையை யாரும் செய்யக் கூடாது. நஷ்டம் ஏற்பட்டால் அது மக்கள் மீதுதான் விழும். இவ்வளவு பெரிய கட்டமைப்பைச் செய்துவிட்டு அதை நஷ்டப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவது தவறில்லையா?” எனக் கேள்விகளை எழுப்பினார்.

இதற்குப் பதிலடி தரும் வகையில், “உல­கில் எங்­கா­வது பேருந்து சேவை இல்­லா­மல் மெட்ரோ ரெயில் சேவை மட்­டும் இருப்­ப­தைக் காட்ட முடி­யுமா? பேருந்து சேவை­யால் மெட்ரோ ரயில் சேவை­யின் பாதிப்­பதை நிரூ­பிக்க முடி­யுமா? சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்­டத்­துக்­குப் பல ஆண்­டு­க­ளாக ஒன்றிய அரசு நிதி தரா­மல் நிறுத்­தி­வைத்­தி­ருப்பது ஏன்? பெண்­க­ளுக்கு இல­வசப் பேருந்து திட்­டத்­தால் மெட்ரோ ரயில்­க­ளில் பய­ணி­க­ளின் எண்ணிக்கை குறைந்­துள்­ளது என்பதை நிரூபித்துக் காட்ட முடியுமா? என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

Next Post

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!-notification of temporary suspension of savukku shankar run by savukku media in tamil

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!-notification of temporary suspension of savukku shankar run by savukku media in tamil

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!-notification of temporary suspension of savukku shankar run by savukku media in tamil

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In