திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஏனாதி மேல் பக்கம் ஊராட்சியில் ரூபாய் 17 லட்சம் செலவில் சுடுகாட்டுக்கான சாலை பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
இதில் 5, 50,000 பணியாளர்களின் கூலித்தொகையாகவும் 11 லட்ச ரூபாய்க்கு இடுபொருட்கள் ஜல்லி செம்மண் மற்றும் இயந்திர வாடகை என தீர்மானிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
11 லட்சத்திற்கு வைக்க வேண்டிய பொருட்களை வைக்காமல் மேலோட்டமாக இரண்டு மூன்று லட்ச ரூபாய்க்கு பொருட்களை வைத்து ஒன்றிய பொறியாளர் மணிமேகலை துணையுடன் சாலை பணிகளை மேற்கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரபு இப்பணிகள் குறித்து மேற்கண்ட கிராமத்திலிருந்து வழக்கறிஞர் மனோஜ் பாரதிய ஜனதா கட்சியின் அரவிந்த் ஆகியோர் புகார் அளித்ததின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் ரவி அவர்கள் நேரில் பார்வையிட்டு பணிகளை உடனே நிறுத்தி இடுபொருட்கள் வைத்து அளவீடு செய்தவுடன் சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்து விட்டு சென்றார்.

அவர் பணியிட மாற்றல் பெற்று வேறு இடம் சென்றவுடன் இதற்கு மேக்கப் வேலைகளை செய்து பணத்தை பெற ஏனெனில் இதற்கு பணம் வழங்கும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் தற்பொழுது மணி சேகர் என்பவர் பணி ஏற்றுள்ளார் இவரால் இப்பணத்தை கொடுக்க பல தகிடதத்த வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளில் முறைகேடு குறித்து பஞ்சாயத்து ராஜ் மத்திய அரசின் புகார் அளித்த அரவிந்த் பலமுறை கேள்வி எழுப்பியும் ஒன்றிய பொறியாளர் அலட்சிய பதிலே அளித்துள்ளார். தற்பொழுது பெய்த மழையால் சாலை பெயர்ந்து சென்றது பேப்பர் சாலை அமைத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஒன்றிய பொறியாளர் மணிமேகலை அலட்சியத்தால் சாலை பணிகளில் மிகப்பெரிய முறைகேடுகள் அவரையும் இடமாற்றம் செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



வெறும் கோரிக்கைகள் வைத்தால் மட்டும் வேலை நடக்காது ஊழலும் ஒழியாது முறைப்படி கையில் உள்ள ஆதாரங்களை வைத்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இல்லையேல் இந்த லஞ்சமும் ஊழலும் தொடரவே செய்யும்