இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி வருவதால் அந்நாட்டின் வான்வழிப் பாதை முழுவதுமாக மூடப்பட்டு அனைத்து வகையான பயணிகள் விமானங்களின் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஈரான் – இஸ்ரேல் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போர் நிறுத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஜூன் 24) காலை அறிவித்தார்.
இருப்பினும், இஸ்ரேல் மீதான தாக்குதல்களை ஈரான் ராணுவம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இதனால், அந்நாட்டின் வான்வழிப் பாதை அடுத்த அறிவிப்பு வரும் வரையில் முழுவதுமாக மூடப்படுவதாக இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
