Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வில்லா கட்டுவதற்கு உரிய உதவி வழங்கும் புதிய திட்டம்: ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிமுகம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 18, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
1
வில்லா கட்டுவதற்கு உரிய உதவி வழங்கும் புதிய திட்டம்: ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிமுகம்
25
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தென்னிந்தியாவின் மிகப்பெரிய ப்ளாட் ப்ரோமோட்டர் மற்றும் தமிழ்நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமான ஜி ஸ்கொயர், சொந்த மனையில் தங்களுடைய கனவு வில்லாக்களை உருவாக்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்குவதற்கு வசதியாக ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட் எனும் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.

ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட் என்பது வழக்கமான ரியல் எஸ்டேட் சலுகைகளையும் தாண்டி மனை வாங்குவதற்கும் அதில் கட்டிடத் திட்ட அனுமதி பெறுவதிலிருந்து கிரஹப்பிரவேசம் வரை வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவையை வழங்கும் வகையில் செயலாற்றும். இதில் திறமையான கட்டிடக் கலைஞர்கள், கட்டுமான நிர்வாகக் குழுக்கள், பொறியாளர்கள் என பல நிபுணத்துவம் பெற்றவர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.

மேலும் கட்டுமானத் துறையில் 65-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற பிராண்டுகளுடன் விரிவான ஒத்துழைப்பு நெட்வொர்க் கொண்டுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வில்லா திட்டங்களை சிறப்பான வகையில் செய்து முடிக்கும்.

உயர்தர கட்டுமானப் பொருட்களைப் பெறுவது, திறமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் பொறியாளர்களை பணியில் ஈடுபடுத்துவது அல்லது நம்பகமான ஒப்பந்தக்காரர்களுடன் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைப்பது, தேவையான இலவச ஒப்புதல்களை பெறுவது போன்ற அனைத்து பணிகளையும் துல்லியமாகவும், விரைவாகவும் செய்து தரும்.

இதுகுறித்து ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலராமஜெயம் கூறும்போது, “ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட்- ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த திட்டத்தை உருவாக்கும் செயல்முறையை வாடிக்கையாளர்களே மேற்கொள்ளலாம்.

நாங்கள் அவர்களுக்கு நிபுணர்களின் கருத்துகளை வழங்குவோம். பிராண்ட் அசோசியேஷன்களின் நெட்வொர்க் மூலம், வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் ரியல் எஸ்டேட் ஆலோசனை மற்றும் தரமான சேவையை வழங்குகிறோம்.

நிபுணத்துவம் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு வாடிக்கையாளரும் அவர்களின் தனித்துவமான விருப்பத்தேர்வுகள், விவரக்குறிப்புகள் மற்றும் பட்ஜெட்டைப் பூர்த்திசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட கனவு இல்லத்தை உருவாக்கி தருகிறோம். சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, பெங்களூரு, ஹைதராபாத், மைசூர் மற்றும் பல்லாரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த சேவை வழங்கப்படும்” என்றார்.

.

Tags: அறமகமஉதவஉரயகடடவதறகதடடம.நறவனமபதயவலலவழஙகமஜஸகயர
Previous Post

திருப்பதி ஏழுமலையானுக்கு இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவம்.. பக்தர்கள் ஹேப்பி.. அக்டோபர் டிக்கெட் ரிலீஸ்

Next Post

அடடா.. உதயநிதி விழாவில் அலங்கார செடிகள் அபேஸ்! விரட்டிய காண்ட்ராக்டர்! வாழைத்தார்களும் போச்சே

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அடடா.. உதயநிதி விழாவில் அலங்கார செடிகள் அபேஸ்! விரட்டிய காண்ட்ராக்டர்! வாழைத்தார்களும் போச்சே

அடடா.. உதயநிதி விழாவில் அலங்கார செடிகள் அபேஸ்! விரட்டிய காண்ட்ராக்டர்! வாழைத்தார்களும் போச்சே

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    வில்லா கட்டுவதற்கு உதவி செய்கிறோம் அப்படி சொல்வது எல்லாம் நம்ப கூடியதாக இல்லை கல்லா கட்டுவது மட்டுமே அவர்களது வாடிக்கை மிகவும் ஆபத்தான நிறுவனம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In