முக்கிய கவனம் செலுத்தப்படும் துறைகள்
தமிழ்நாடு மின்னணு உற்பத்தியில் டிஸ்ப்ளே மற்றும் கேமரா மாட்யூல்கள், பிசிபி (Printed Circuit Boards), லித்தியம் அயன் செல்கள், எஸ்எம்டி பாசிவ் கூறுகள் (ரெசிஸ்டர்கள், கெபாசிட்டர்கள், டயோட்கள்), மற்றும் ஃப்ளெக்ஸிபிள் பிசிபிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக, உயர் தொழில்நுட்பம் தேவைப்படும் ஹை-டென்சிட்டி இன்டர்கனெக்ட் (HDI) பிசிபிகள் மற்றும் வேரியபிள் டிவைஸ்கள் (ஃபிட்னஸ் பேண்ட்கள், ஸ்மார்ட் வாட்ச்கள்) உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் உடன் இணைந்து பணியாற்ற மாநில அரசு முயற்சிக்கிறது என்றும் டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டர்.
