Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சர்வதேச அலைச் சறுக்கு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி வாழ்த்து.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 21, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், சினிமா செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
சர்வதேச அலைச் சறுக்கு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி வாழ்த்து.
9
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: “மகாபலிபுரத்தில் நடைபெற்ற பன்னாட்டு அலை சறுக்கு போட்டியின் தகுதி சுற்றில் சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ள ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சாரா வகிடா மற்றும் டென்ஷி இவாமி ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளனர்.

Congratulations to Tenshi Iwami and Sara Wakita from Japan for winning the Championship titles in the Tamil Nadu International Surf Open – World Surf League (WSL) Qualifying Series (QS) – 3000 event held at Mamallapuram, Chennai. The event was jointly conducted by the SDAT and… pic.twitter.com/3NV2HK5qmm

— Udhay (@Udhaystalin) August 20, 2023

இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு அலை சறுக்குப் போட்டியில் சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ள ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சாரா வகிடா மற்றும் டென்ஷி இவாமி ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள்.

உலக அலை சறுக்கு லீக் அமைப்பின் தொடரை முதன்முறையாக இந்தியாவில் நடத்திக் காட்டியுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெருமுயற்சியைப் பாராட்டுகிறேன். 44-ஆவது செஸ் ஒலிம்பியாட், WTA சென்னை ஓப்பன் மற்றும் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர்களைத் தொடர்ந்து மேலும் ஒரு மகுடமாக இது அமைந்துள்ளது.

இதனால் நமது தமிழகம் பெருமிதம் கொள்கிறது. உலக அலை சறுக்கு வரைபடத்தில் தமிழகத்தை இடம்பெறச் செய்யும் முயற்சியில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னகர்வு” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு அலை சறுக்கும் சங்கம் மற்றும் இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்புடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பன்னாட்டு அலை சறுக்கு லீக் போட்டிகள் கடந்த 14-ம் தேதி முதல் நடந்தது.

இதில், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 70 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் மகளிர் பிரிவில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சாரா வகிடா மற்றும் டென்ஷி இவாமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Previous Post

அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: 8 மணி நேரத்தில் மீட்ட தனிப்படை.

Next Post

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழகம் முழுவதும் உள்ள 12,200 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In