Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்… பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 29, 2024
in Default
1
பிரதமா் பிரசார நிகழ்ச்சியில் மாணவா்கள்: 3 தனியாா் பள்ளிகள் மீது பாய்ந்த வழக்கு.!
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவையில் மோடி ரோடு ஷோவில் மாணவ – மாணவியரைப் பங்கேற்க வைத்த பள்ளி நிர்வாகம் மீது ஏப்ரல் 3-ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் மோடியின் ரோடு ஷோ- உடன் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை

கோவையில் மோடியின் ரோடு ஷோ- உடன் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை

மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை மற்றும் சேலத்தில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடந்த 18-ம் தேதி கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பள்ளிச் சீருடையில் மாணவ – மாணவிகளும் பங்கேற்றது சர்ச்சையானது.

விசாரணையில், பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பங்கேற்றது சாய்பாபா காலனியைச் சேர்ந்த அரசு உதவி பெறும் ஸ்ரீ சாய் பாபா வித்யாலயம் நடுநிலைப் பள்ளி என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பள்ளி மீது கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றதாக பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி சீருடையில் 32 மாணவ – மாணவிகள் பங்கேற்றதாக கூறுவதும், அவர்களை கட்டாயப்படுத்தி ரோடு ஷோவில் பங்கேற்க வைத்ததாக கூறுவதும் தவறான குற்றச்சாட்டு. ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் பங்கேற்றதில் பள்ளி நிர்வாகத்திற்கு எந்த தொடர்பும் கிடையாது. அதனால் பள்ளி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டது.

உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

இந்த மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, “இந்த வழக்கு தொடர்பாக சாய்பாபா காலனி காவல் ஆய்வாளர் ஏப்ரல் 3-ம் தேதி பதலளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுவரை பள்ளி நிர்வாகம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Previous Post

சாலையில் கவிழ்ந்த லாரி; உடல் நசுங்கி 75 ஆடுகள் உயிரிழப்பு..

Next Post

₹2,000 நோட்டு மாற்ற கடைசி வாய்ப்பு… ரிசர்வ் வங்கியின் முக்கிய தகவல்.!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
₹2,000 நோட்டு மாற்ற கடைசி வாய்ப்பு… ரிசர்வ் வங்கியின் முக்கிய தகவல்.!!

₹2,000 நோட்டு மாற்ற கடைசி வாய்ப்பு... ரிசர்வ் வங்கியின் முக்கிய தகவல்.!!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    கமெண்ட்ஸ் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In