ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெறுகிறது. இதில் பல உலக தலைவர்கள், உலக பிரபலங்கள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல துறை சார்ந்த முக்கிய நபர்கள் கலந்துகொள்கின்றனர்.
அனந்த் அம்பானி பின்னணி:
அனந்த் அம்பானி அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்-ன் எரிசக்தி பிரிவின் நிர்வாகப் பொறுப்பாளராக உள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் நியூ எனர்ஜி லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி லிமிடெட் வாரியங்களில் அனந்த் இயக்குநராக பணியாற்றுகிறார். மேலும் செப்டம்பர் 2022 முதல் ரிலையன்ஸ் அறக்கட்டளை வாரியத்திலும் பணியாற்றி வருகிறார்.
அதுமட்டுமின்றி, 2035-க்குள் நிகர கார்பன் ஜீரோ நிறுவனமாக மாறும் ரிலையன்ஸின் பயணத்தை அனந்த் அம்பானி வழிநடத்தி வருகிறார். விலங்குகள் நலனில் அனந்தின் ஆர்வம், மீட்பு, சுகாதாரம், மறுவாழ்வு மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு முயற்சிகள் அவரது ஈடுபாட்டை உறுதி செய்கிறது.
ஜாம்நகரில் உள்ள அம்பானியின் விலங்குகள் மீட்பு மையமான வந்தாராவில் அனந்தின் திருமணத்திற்கு முந்தைய விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றதால், விலங்கு பாதுகாப்பு மீதான அவரின் ஆர்வம் பிரதிபலித்ததாக பலரும் கருதினர். வந்தாராவின் பிரமாண்ட திறப்புக்குப் பிறகு நியூஸ் 18 உடன் பேசிய அனந்த் அம்பானி, இந்த மையம் சனாதன் நம்பிக்கைகளில் வேரூன்றியுள்ளது என்றும், விலங்கு நலன் மற்றும் சமூகத்திற்கு நல்ல விஷயங்களை திரும்பக் கொடுப்பதற்கான அவரது விருப்பத்தின் காரணமாக இந்த முயற்சி உந்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.
வந்தாரா என்பது அம்பானிகளின் விரிவான விலங்கு மீட்பு, பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டமாகும். ரிலையன்ஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்தின் பசுமைப் பகுதியில் 3,000 ஏக்கர் பரப்பளவில் பரவி, உலகம் முழுவதும் இருந்து 43 இனங்களில் 2,000 க்கும் மேற்பட்ட விலங்குகள் மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Also Read |
‘மாமேரு விழா’… கவனம் ஈர்த்த ராதிகா மெர்ச்சன்ட் ஆடை… சில பின்னணி தகவல்கள்!
‘நமது சனாதனத்தில் (தர்மம்), ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவர்களின் இதயத்திற்கு நெருக்கமான விலங்கு உள்ளதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு வாகனம் உள்ளது, அது ஒரு விலங்கு. ரிக்வேதத்திலும், கிருஷ்ணர் மனிதனாக இருந்தாலும் சரி, தேனீயாக இருந்தாலும் சரி, எறும்பாக இருந்தாலும் சரி, எல்லா உயிர்களும் சமம் என்று கூறுகிறார். இங்கே வந்தாராவில், நாங்கள் தவளைகள் முதல் எலிகள் வரை அனைத்து உயிர்களையும் கவனித்துக்கொள்கிறோம்,’ என்று அனந்த் அம்பானி நியூஸ் 18-ன் ஒரு பிரத்யேக பேட்டியில் கூறியிருந்தார்.
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இருவரும் ஜனவரி 2023-ல் மும்பையில் உள்ள இல்லமான ஆன்டிலியாவில் பாரம்பரிய விழாவில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். ஆடம்பரமான சங்கீத் மற்றும் ஹல்டி விழாவிற்குப் பிறகு, இந்த ஜோடிக்கு இன்று ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெறுகிறது.
அனந்த் மற்றும் ராதிகாவின் திருமண சடங்குகள் இன்று தொடங்கியுள்ளது. முதல் விழா ‘ஷுப் விவா’ என்று அழைக்கப்படுகிறது. இந்திய பாரம்பரியத்தில் அனைவரும் தோன்றுவர். நாளை ‘ஷுப் ஆஷிர்வாத்’ தினம் ஆகும். மேலும், ஆடைக் குறியீடு என்பது இந்திய முறையாகும். ஜூலை 14 ‘மங்கல் உத்சவ்’ (திருமண வரவேற்பு) என்று கூறப்பட்டுள்ளது.
.
