இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவிட்டு வரும் பலர், அனுமதியின்றி சாலைகளில் இருக்கும் பெண்களை, குழந்தைகளை வீடியோ எடுத்துப் பதிவிடுவது தொடர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
அவ்வகையில் பெங்களூரு சர்ச் சாலை, கோரமங்களா பகுதியில் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் பெண்களை அனுமதியின்றி வீடியோ எடுத்து “Videos Of Bengaluru Women’ என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வேகமாக பரவ, வீடியோவில் இருக்கும் பெண்கள் குறித்த ஆபாசமான கமெண்ட்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.

இதைக் கண்ட அந்த வீடியோவில் இருக்கும் பெண் ஒருவர், “சும்மா தெருக்களை வீடியோ எடுக்கிறேன் என்ற பெயரில் பெண்களை பின்தொடர்ந்து, ரகசியமாக வக்கிரமான எண்ணத்துடன் வீடியோ எடுத்தார் இந்த நபர். அனுமதியின்றி இப்படி பெண்களை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். காவல்துறை இந்த நபரைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது சமூகவலைதளப் பக்கத்தின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
